நடிகர் யோகிபாபு மீது போலீஸில் ‘ஜாக் டேனியல்’ பட தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது ‘ஜாக் டேனியல்’ திரைப்பட தயாரிப்பாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (வயது 48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன். படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, முன்பணமாக ரூ.20 லட்சம் யோகிபாபு பெற்றுக்கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்தபோது, அவர் வரவில்லை.
படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.