ஹரித்துவாரில் கேட்பாரற்று கிடக்கிறது திருவள்ளுவர் சிலை!

கங்கை கரையில் நிறுவுவதற்காக கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பூங்கா ஒன்றில் கருப்பு நிற பாலிதீன் கவரால் சுற்றி கட்டப்பட்டு, கேட்பாற்று தரையில் கிடத்தப்பட்டிருப்பது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவ பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். ஆனால், சமஸ்கிருத பார்ப்பன மதவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை வைப்பது தடுக்கப்பட்டது.

பின்னர் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஸ் ராவந்த், ஆதி சங்கரரின் பெயர் கொண்ட சங்கராச்சாரியா சதுக்கத்தில்  திருவள்ளுவர் சிலை வைக்க பரிந்துரைத்தார். ஆதி சங்கரரின் சிலை அருகே திருவள்ளுவர் சிலை வைப்பதா என அதற்கும் சமஸ்கிருத பார்ப்பன மதவெறியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். “தேர்தல் அரசியலுக்காக தருண் விஜய், திருவள்ளுவர் என்கிற தலித் தலைவரை உயர்த்திப் பிடிக்கிறார். உத்தரகாண்ட் ஆலயங்களில் தலித் நுழைவு போராட்டத்தை நடத்திய தருண் விஜய்யின் அடுத்த அரசியல் இது” என்று அவர்கள் சாடினார்கள்.

இதனால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. இதை தருண் விஜய் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி தமிழக எம்பிக்கள் பலரும் போய் கலந்துகொண்டனர். எனினும் ஆதிக்க சாதி – மத வெறியர்களின் எதிர்ப்பு குறைந்தபாடில்லை.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலை அங்கிருந்தும் அகற்றப்பட்டு, பூங்கா ஒன்றில் கருப்பு நிற பாலிதீன் கவரால் சுற்றி கட்டப்பட்டு, கேட்பாற்று தரையில் கிடத்தப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்துள்ள இந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சில:-

கவிஞர் வைரமுத்து: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழர் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளுவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல, பெருமைதான். சிலை அவமதிப்பு விவகாரத்தில் உத்தராகண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் இணைந்து சிலையை மீட்டெடுக்கும்.

Dr. Shalini: Guess what is inside this plastic bag?!
The statue of Saint Thiruvalluvar, abandoned in Haridwar.
I don’t believe in worshipping statues.
But throwing this statue around like this hurts my Tamil sentiments.
Ah, do grow up Shalini, you live in a strange country where might over rules merit.

சுபாஷ் சூலூர்: வழிகாட்டுகிறார்கள் வடநாட்டுக்காரர்கள்!

விருந்தினராக வீட்டுக்கு அழைத்து மூக்கறுப்பது’
என்பார்களே! தமிழர்களுக்கு இப்போது நடந்துள்ளது.
தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் (கங்கைக்
கரையில்) நிறுவுவதாக எடுத்துச் சென்றது
ஊரறிந்தசெய்தி!வடநாட்டார் விடுவார்களா?
மூலையில் கிடக்கிறார் திருவள்ளுவர்!
உணர்ச்சியுள்ள தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.
திருவள்ளுவர் சிலையை நிறுவக்கூடாது என்று
உத்தரகாண்ட் மாநில மக்கள் எதிர்த்ததால்
சிலை திறப்பு நிகழவில்லை!
பக்கத்து மாநிலமான உத்திரப்பிரதேசப்
பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையின்
மூலையில் வைக்கப்பட்டுள்ளார்
திருவள்ளுவர் (29.6.2016)

தமிழினத்தின் சான்றோர்கள், அற நூல்கள்,
இலக்கியங்கள், பண்பாடுகள் எதையும் வடநாட்டவர்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்னும் உண்மையை
மீண்டும் உலகத்திற்கு அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.

திருவள்ளுவருக்கு நேரிட்ட இந்த அவமான நிகழ்வு
உணர்த்தும் உண்மைகள் ஒன்றிரண்டா?
தமிழ்நாட்டிலிருந்து தடபுடலாக ஊர்வலம் நடத்தித்
திருவள்ளுவர் சிலையை எடுத்துச் சென்ற தருண்
விசய், அதே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த
மாநிலங்களவை உறுப்பினர்!

கங்கைக்கரையில், அரிக்கிபவுடி என்ற இடத்தில்,
சிலையை நிறுவ ஏற்பாடு செய்தார்கள். அப்பகுதி
மக்கள் கடுமையாக எதிர்த்ததால் அங்கிருந்து
வேறோர் இடமான ‘சங்கராச்சாரியார் சவுக்’ என்ற
இடத்திற்கு சிலை நிறுவக் கொண்டு
போனார்கள். அங்கே சாமியார்களும்
மக்களும் எதிர்ப்பு! அந்த முயற்சியும் கைவிடப்பட்டு ,
உத்திரப்பிரதேச (ஆளுநர் இராம் நாயக் முயற்சியில்
அவருடைய மாநிலத்திற்குச் சொந்தமான)
பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையின் ஒரு
மூலையில் சிலையை வைத்துவிட்டார்கள்!

இராமகிருட்டிணர் என்ன! விவேகானந்தர் என்ன!
தமிழ்நாட்டில் அவர்கள் பெயரில் நிறுவனங்கள்
கொஞ்சமா? சிலைகளுக்குப் பஞ்சமா? சமற்கிருதம் –
ஆரியம் – இந்துத்துவா எனத் தமிழருக்கு
எதிரானவற்றைத் தாராளமாக வடவர்கள்
இங்கே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவள்ளுவர் செய்த ஒரே குற்றம், தமிழ் இனத்தில்
பிறந்தது மட்டும்தான்! தமிழர்களுக்கு எதிரான
ஆரியத்தின் காழ்ப்புணர்ச்சி இரண்டாயிரம்
ஆண்டுகளாக நீடிக்கிறது.
பகவத்கீதையையும் வடமொழியையும் உயர்வாகக்
கருதக்கூடிய – கையாலாகாத மனப்பான்மை இங்கே
நீடிக்கிறது! அந்நியனை அண்டி வாழும் இழிந்த
தமிழர்கள் இங்கே இன்னும் இருக்கிறார்கள்.

உலகின் முதல் இனமான – உலகின் முதல்
செம்மொழிக்கு சொந்தக்காரர்களான தமிழினத்தில்
பிறந்தவர்கள் நாம்!
ஆரியத்திற்கும் தமிழினத்திற்கும் இணக்கம் காணச்
சிலர் முயல்கிறார்கள்! ஆரியத்திற்குத் தமிழரை
அடிமையாக்க நினைப்பவர்களே அவர்கள்!

சமற்கிருதத் திணிப்பை ஆதரிக்கும் ஏடுகளும்,
அமைப்புகளும் இங்கே இருக்கின்றன.
தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் சிலைக்கு 10 சதுர
அடி நிலம் கொடுக்கக் கூடிய நிலை வடநாட்டில்
இல்லை.

தமிழ்நாடு அரசு தலையிடுமா?அவமானப்பட்ட நிலையில்
அரித்துவாரில் சிறை வைக்கப்பட்டுள்ள
திருவள்ளுவர் சிலை மீட்கப்படுமா?
தமக்கான மொழி,இன அடையாளங்களைக் காக்கும்
ஊக்கம் தமிழினத்திற்கு வேண்டும்!
மொழியைப் பேணாத எவரும் நாடற்ற ஏதிலியே!