பாஜக அரசை விமர்சிக்க உலகிலேயே முதன்முதலாக வலைதளம் நிறுவியவர் சுப.உதயகுமார்!
ஓர் இரவு மட்டுமே வாழும் ஈசல் பூச்சிகளை போல தினம் தினம் வாழ்ந்து மடியும் இன்ஸ்டன்ட் போராளிகள், ராக்கெட் வேகத்தில் உயரவுள்ள ரத்தக்கொதிப்பை தவிர்க்க நினைத்தால், இந்த முதல் பத்தியை படிக்காமல் நேரடியாக அடுத்ததாக உள்ள இரண்டாம் பத்திக்கு செல்லவும். நீங்கள் பார்க்கும், படிக்கும், உங்களுக்கு பகிரப்படும் எல்லா முக்கிய தலைப்புச் செய்திகளுக்கு பின்னால் ஒரு ஆழமான டிசைன் இருந்தே தீரும். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் திடீர் போராளி modeல் நீங்கள் இன்ஸ்டன்ட் பொங்கல் வைப்பவராக இருந்தால் அந்த டிசைனின் ஆதியும் புரியாது, அந்தமும் புரியாது. உங்கள் ஆத்திரமும் அவசரமும் ஒரு இரவுக்கு ஏதாவது ஒரு hashtagக்கு எண்ணிக்கைக்கு மேலும் ஒரு பதிவை கூட்டவே உதவும். நடப்பதை உள்வாங்காமல் அப்படியே பாகுபலி படத்தில் கொம்பு பத்த வைத்த காளைமாட்டு மந்தை மாதிரி ஓடினால், பின்னால் வரும் மடை திறந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவீர்கள்.
முன்னெச்சரிக்கையாக சொல்லியும் நீங்கள் இந்த பத்தியை தவறாமல் படித்திருப்பீர்கள். அதற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் படிக்கவும். 🙂
What is India’s first whistleblower website?
அதாவது, இந்தியாவிற்கு முதன்முதலாக அரசாங்க நடவடிக்கைகளையும் தகவலையும் ஆய்ந்து தரம்பிரித்து விமர்சித்து இணையத்தில் ஏற்றி, அதை பரப்பிய வலைதளம் எது?
1998ம் ஆண்டு அமெரிக்காவின் மினியாப்பலீஸ் நகரில் உள்ள மினெஸோட்டா பல்கலைகழகத்தில் இருந்து இயங்கிய, இன்று செயல்பாட்டில் இல்லாத அந்த இணையதளம் தான் India’s first whistle-blower websiteஆக குறிப்பிட தகுதியானது என நம்புகிறேன்.
அது www. BJPGovernmentWatch .com
அந்த தளத்தை நிறுவி நடத்தி வந்தவர் பேராசிரியர் சுப.உதயகுமார்.
பாரதீய ஜனதா கட்சி முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்த 1998ம் ஆண்டு முதலே அந்த தளத்தின் மூலம் அரசை பற்றிய விமர்சனங்களை எழுதி வந்துள்ளார். Expose என்ற வகையில் கட்டுரைகளையும் எழுதி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அன்று ஆரம்பித்த மோதல் இன்று Republic TV வெளியிட்ட உப்பு சப்பில்லாத ரகசிய உரையாடல்கள் வரை வந்துள்ளது (ஏன் உப்பு சப்பில்லாததுன்னு பின்னால் பேசுவோம்).
கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டத்தில் அன்றைய மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக அணிதிரண்ட போராட்டம் என்பதால், தமிழக பாரதீய ஜனதாவும் களமிறங்கியது. PMANE போராட்ட குழுவுக்கு ஆதரவில்லை, ஆனால் நாங்களும் அணுவுலையை எதிர்க்கிறோம் என்று ஒரு பக்கம் கம்பு சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு அமைத்ததும் அணுவுலையை இயக்கவே முழுவீச்சாக வேலையில் இறங்கியது.
The Left chooses Propaganda over Agenda.
The Right chooses Agenda over Propaganda.
அணுவுலை போராட்டம் இடதுசாரிகளின் ஸ்டைலில் நடந்ததால் பிரசாரம் சூடுபிடித்ததே தவிர குறிக்கோளான அணுவுலை தடுப்பு நடக்கவில்லை.
அன்றைய அரசியல் வலதுசாரிகள் ஸ்டைலில் நடந்ததால், அணுவுலை வருதோ இல்லையோ, ஆட்சியை பிடிக்க காரியத்தில் கண்ணாக இருந்து வேலை செய்த நரேந்திர மோடி பிரதமரானார். அதுவும் தனிப்பெரும்பான்மையுடன்.
நேற்று இரவு நேர “தி கிரேட் கரிகாலன் மேஜிக் ஷோ”வில் அர்னப் கோஸ்வாமியின் சமீபத்திய கதறல் திரு.சுப.உதயகுமார் பற்றிய செய்தி. நானும் பத்து நிமிஷம் பார்த்தேன். என்னத்த கண்டுபிடிச்சு expose பண்ணானுங்கன்னு சுத்தமா கடைசி வரைக்கும் தெரியவேயில்ல. Exclusive, Super Exclusive, Ultra Exclusive-ன்னு டைட்டில் மேல டைட்டில் தான் வந்தது. அர்னப் சொன்ன எந்த விஷயமும் கோர்ட்டில் எடுபடாது. அது சும்மா கண்கட்டி வித்தை தான். நயா பைசாக்கு பேராத நியூஸ்.
தட்டுல போட்டா அர்ச்சகருக்கு. அதையே உண்டியல்ல போட்டா அறநிலையத்துறைக்குங்கற மாதிரி தான் இதெல்லாம். உலகம் பூரா எல்லா Non-Profit Organizationகளும் இப்படித்தான் காலா காலமா இயங்கிட்டு இருக்கு. இதை டிவில போட்டு, அதுவும் பணம் கைமாறிய ஆதாரம் எதுவும் காட்டாத, ஒரு உப்பு சப்பில்லாத நியூஸை, அவன் காசு வருதுன்னு சொன்னான், இவன் காசு வருதுன்னு சொன்னான்னு ஒரு மணி நேரம் இழுத்து அர்னப் ரம்பம் போட்டிருக்கான். கோர்ட்ல கொண்டு போய் கொடுத்தா, நீதிபதியே கடுப்பாகி, கோர்ட் நேரத்தை வீண்டித்ததற்காக அர்னப்புக்கு தான் fine போடுவாரு. இந்த விஷயத்தை போய், சரி தவறுன்னு நேத்து ராவெல்லாம் ரெண்டு பக்கமும் கும்பல் கூடி ஒரே கூச்சல் வேற. ச்சை! 🙂
சுப.உதயகுமார் அமெரிக்காவில் பேராசிரியாக இருந்த காலத்தில் இருந்தே பரிவாரத்தினரை வெப்சைட் எல்லாம் போட்டு expose பண்ணி வம்பிழுத்திருக்காரு. அர்னப் கோஸ்வாமியை வெச்சு ஆரம்பிச்ச சேனல்ல, பரிவாரத்தினர் நான் உனக்கு பண்றேன் பாரு ஒரு exposeன்னு எதையோ ஒரு மாதிரியா மசமசன்னு ட்ரை பண்ணியிருக்காங்க. அவ்ளோ தான்.
எல்லா நக்கல் நையாண்டியையும் தாண்டி, இதில் நான் ரொம்ப சீரியசாக வியந்து பார்த்த விஷயம் இது ஒன்று தான்.
20 வருடங்களுக்கு முன்னால், இன்டர்நெட் என்பதே இந்தியாவில் வியாபிக்காத காலத்தில், தாங்கள் அமைத்த முதல் அரசாங்கத்தை, ஏதோ ஒரு வகையில் இணையதளமெல்லாம் போட்டு உரசிப்பார்த்த ஒருவரை இத்தனை காலம் கழித்தும் ஸ்கெட்ச் போட்டு கட்டம் கட்ட முடியும் என்றால், அது சங் பரிவாரத்தினரால் மட்டுமே சாத்தியம்.
சுற்றி நடக்கும் விஷயத்தின் ஆதியும் அந்தமும் புரியாமல், Strategy, Back Up என்று எந்த எழவும் இல்லாமல் வெறுமனே கம்பு சுற்றுபவராக இருந்தால், தாங்கள் சற்றே சூதானமாக இருப்பது நல்லது. நன்றி!
What was attempted on Suba Udayakumar last night is the Parivaar’s Payback and you better know the faint history or background before your mind gets jinxed up with stories sold by media. Thank you!
KARTHIK RANGARAJAN