தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2025/01/0a1a.jpg)
தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ என்னும் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதன் பெரும்பாலான காட்சிகளை ஒரே கட்டமாக படமாக்கி முடித்துவிட்டார். விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தனுஷ் தனியாக இருப்பது போன்றும் மற்றும் ராஜ்கிரணுடன் இருப்பது போன்று என இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தை ஆகாஷ் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.
ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இதில் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.