“வானதி சீனிவாசனுக்கு பானி பூரி தர மறுத்தவன் எவன்டா…?”

ஹிந்தி படித்தவனுக்கும் வடமாநிலங்களில் வேலை இல்லை என்பதுதான் இன்றைய நிலை. ஆனால், தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்க விரும்பும் ஆதிக்கவாதிகள், “ஹிந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும்” என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி வருவது வாடிக்கை.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், இதே விஷயத்தை ரொம்ப சாமர்த்தியமாக வேறு வார்த்தைகளில் கூறியிருந்தார். “ஹிந்தி தெரியாததால் வடமாநில மக்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை” என்று அங்கலாய்த்திருந்தார் அவர்.
இதற்கு எதிர்வினையாக Karthickkalki Yehoshuah Muhammed என்பவர் பதிவிட்டுள்ள பதிவு:-
“ஹிந்தி தெரியாததால் வடமாநில மக்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை” – வானதி சீனிவாசன்.
என் தலைவி extra பானி பூரி கேட்டு எவன்டா தர மாட்டன்னு சொன்னது…? ராஸ்கோல்…!
நீ வா தலைவியே…! எனக்கு ஹிந்தி தெரியும்…! நான் வாங்கி தர்றேன்…!