நாத்திகர்களுக்கு சிறகு பொருத்தியவர்!
உலகின் ஆகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாள் இன்று. உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிப் போட்டவர்கள் ஒரு சிலர்தான். அவர்களில் டார்வின் முக்கியமானவர். உயிர்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை தெள்ளத் தெளிவாக விளக்கியதில் இருந்து இன்றைக்கு தடுப்பு மருந்துகள், கான்சர் மருத்துவம், மரபணு சார்ந்த சிகிச்சைகள் என்று அவரது தியரியின் வீச்சு அபாரமானது.
அது எல்லாவற்றையும் விட முக்கியமாக புனித நூல்கள் சொல்லும் பிரபஞ்ச உருவாக்க விவரணைகள் எல்லாமே அம்புலிமாமா கதைகள்தான் என்று காட்டியதில் டார்வினிசத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. என் போன்ற நாத்திகர்களுக்கு சிறகு பொருத்தியவர். உலகெங்கும் தௌலத்தாக சுற்றிக் கொண்டிருந்த மத குருக்களை பம்ம வைத்தவர். மதங்களைக் கட்டி அழுது கொண்டிருந்த உலகம் நவீன மயமாகி செக்யூலரிசத்தைத் தழுவியதில் டார்வினுக்கு தலையாய பங்கு உள்ளது. அந்த ஒரு காரணத்துக்காகவே இந்த நாள் இனிய நாளாகிறது.
டார்வினியர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள். பரிணாம வளர்ச்சி தத்துவம் என்பது இன்று வரை நிரூபிக்கப்படாத தியரிதான் என்று பிடிவாதம் பிடிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-ஸ்ரீதர் சுப்ரமணியம்
(அறிவியலாளர் சார்லஸ் டார்வின் பிறந்தநாள் இன்று)