‘கடவுள் இருக்கான் குமாரு’: ஜி.வி.பிரகாஷூடன் மீண்டும் இணைந்தார் ஆனந்தி!

ஜி.வி. பிரகாஷ், ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
முதலில் இப்படத்தின் நாயகிகளாக அவீகா கோர், நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முக்கிய பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட பல இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில், அவீகா கோருக்கு பதிலாக தற்போது ஆனந்தி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவீகா நடிப்பில் திருப்தி இல்லாததால் ஆனந்தியை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாக இப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.