குஜராத், இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதியும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியிட்டது.
இன்று (08-12-2022) குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில், கடைசியாக கிடைத்த தகவலின்படி ஆளும் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்று, ஏழாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கிறது.
வெற்றி / முன்னிலை நிலவரம்:
பாஜக = 157
காங்கிரஸ் = 16
ஆம் ஆத்மி= 5
இதரவை = 4
# # #
இமாசலப்பிரதேசம்:
68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாயின.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது.
இன்று காலை 8 மணி தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டது. பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை என்ற நிலையில், தொடக்கத்தில் இழுபறி நிலைமை நீடித்தது. பின்னர் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று முன்னிலை வகித்தது.
கடைசியாக கிடைத்த தகவலின்படி…
வெற்றி / முன்னிலை நிலவரம்:
காங்கிரஸ் = 39
பாஜக = 26
ஆம் ஆத்மி= 0
இதரவை = 3