“கோடை கொண்டாட்டம் – 2022” தொடக்க விழா!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாண்புமிகு ராஜ்யசபா எம்.பி வில்சன் அமைச்சர் அவர்கள் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஜூன் 2-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.௦௦ மணியளவில் தொடங்கி வைத்தார்கள் .

0a1d

இந்த பொருட்காட்சி நிகழ்வில் சென்னை மக்களின் கோடை விடுமுறையை குடும்பத்துடன் குளிர்ச்சியாக கொண்டாடும் வகையில் “குற்றால அருவி – Water Falls”, “பனிக்கட்டி உலகம்-Snow World”, 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ கார்னிவல் விளையாட்டுகள் (கார்னிவல் Games), 10க்கும் மேற்பட்ட புதுமையான நிகழ்ச்சிகள் (Special Shows) மற்றும் வசந்த் & கோ, ஆச்சி மாசாலா போன்ற வணிக அரங்குகளுடன் மிக பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.

கோடை கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள்:

* சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும் வகையில் “சென்னையில் குற்றால அருவி”

கோடை விடுமுறையை குளிர்ச்சியாக்க பனிக்கட்டி உலகம் மற்றும் DJ Sound System with Stage

* குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட Giant Wheel, Tora Tora, Peacock, Watter Roller, Techno Jump, போன்ற 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம்

* 3D தியேட்டர், கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் காட்சி, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, மேஜிக் ஷோ போன்ற பல்வேறு ஸ்பெஷல் ஷோ

* குழந்தைகளை குதுகலப்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களுடன் Augmented Reality Show

* வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி மகிழ 50க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்

டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம்ஸ் மற்றும் பிரியாணி போன்ற உணவு அரங்குகள்

ஏசி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டி.வி., போன்ற இதர வீட்டு உபயோகப் பொருட்கள் (Home Appliances) அனைத்தையும் சலுகை விலையில் வாங்கிட வசந்த் & கோ அரங்கம்

மகளிர் மனம் மகிழ சமையலுக்கு தேவையான அனைத்து மசாலாக்கள் வாங்கிட ஏதுவாக ஆச்சி மசாலா (Aachi Masala) அரங்கு

பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியானது இன்று முதல் 45 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்காட்சியின்  (வரிகள் உட்பட) நுழைவுக் கட்டணம் ரூபாய் ரூ.60/- (அறுபது) மட்டும்.

பொருட்காட்சி நேரம் -திங்கள் முதல் சனிக்கிழமை வரை:

|மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

|ஞாயிற்று கிழமைகளில் 😐 காலை 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட

தீவுத்திடலுக்கு வாங்க ..!..

சந்தோஷமாக போங்க .!..