சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்: 24 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உலகெங்கும் மார்ச் 10ஆம் தேதி ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரிலீசாகவிருக்கும் நிலையில், இதன் டீசர் நேற்று (18.02.2022) மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடி வருகிறார்கள். விளைவாக, இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசர் வீடியோ:-