டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கியது
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 19 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் ‘பரிசுப்பெட்டி’ என்ற ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிட வழிவகை ஏற்பட்டுள்ளது.