பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பார்ப்பன மதவெறியர்கள் அட்டூழியம்!
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில், பார்ப்பன மதவெறி அமைப்புகளை துணிச்சலாக விமர்சித்துவந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்லேஷ், பார்ப்பன மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர், வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், பார்ப்பனியத்தை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் பார்ப்பன மதவெறி அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற வகுப்புவாத கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார் கௌரி லங்கேஷ்.
அச்சமின்றி இடைவிடாது பத்திரிகைப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த கௌரி லங்கேஷை, அவரது வீட்டு வாசலில், நான்கு பார்ப்பன மதவெறியினர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.