ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் புதிய படத்துக்கு ‘கஜினிகாந்த்’ என பெயரிட்டுள்ளார்கள் ஆர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களின் இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார்.
இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார். மேலும், பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா.ஜிகே படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்கத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது.