தாய்மையை போற்றும் “ஜோதி” ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வருகிறது

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ’ஜோதி’.

மிகப் பெரிய சஸ்பென்ஸ் திரில்லரோடு சேர்ந்து அமைந்திருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு.

இந்த ஜோதி திரைப்படத்தை “டிக் டாக்” பிரபலமான ஜி .பி.முத்து பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்.

”படத்தில் சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கிறது என்றும், அது இதுதான் என்று நாம் கணிக்கையில் அது இல்ல அப்படின்னு நம் கவனத்தை வேறு மாதிரி திசை திருப்புகின்றது இந்த படம் என்று ’ஜோதி’ படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் 11ஆயிரம் குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள். அதில் இன்றைக்கு வரைக்கும் 10800 குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்று; அதிர்ச்சியான ஒன்று.

இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதை. குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம் தான்” என்றும் கூறினார் ஜி பி முத்து.