“நான் ஓட்டு சேகரிக்க அல்ல, சோறு சேகரிக்க வந்துள்ளேன்”: விவசாயிகள் மத்தியில் கமல் பேச்சு!
மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு, தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது? அரசியல்வாதிகள் என்பவர்கள் தனியாக இல்லை, நம்மோடு தான் இருக்கிறார்கள்.
மழைகளையும், ஆறுகளையும் சாமியாகக் கும்பிடுங்கள். வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட முடியாது. ஹைட்ரோ கார்பனையும் சாப்பிட முடியாது சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும். உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது.
என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி. புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப் போல நான் உதவ வந்துள்ளேன். நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்க வந்துள்ளேன்.
உழவனின் மகன் இல்லையென்றாலும், உழவனின் மருமகன் நான்.
ஒருவர் டெல்லியில் இருந்து என்னை ‘தமிழ் பொறுக்கி’ என்றார். நான் பொறுக்கி தான். அறிவு, ஞானம் என்றுவரும்போது நான் பொறுக்கிதான் என்பதை நான் ஏற்று கொள்கிறேன்.