திமுக கூட்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வருகிற (மே 2ஆம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கிடையே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாடு:

மொத்தமுள்ள தொகுதிகள் 234. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

டைம்ஸ் நவ் – சிஎன்எக்ஸ்: திமுக கூட்டணி 160 – 170; அதிமுக கூட்டணி 56 – 68.

பி மார்க்: திமுக கூட்டணி 165 – 190; அதிமுக கூட்டணி 40 – 65.

டுடேஸ் சாணக்கியா: திமுக கூட்டணி 164 – 186; அதிமுக கூட்டணி 46 – 68.

இண்டியா டுடே – ஆக்சிஸ்: திமுக கூட்டணி 174 – 195; அதிமுக கூட்டணி 38 – 54.

ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ்: திமுக கூட்டணி 160 – 170; அதிமுக கூட்டணி 58 – 68.

ஏபிபி – சி வோட்டர்: திமுக கூட்டணி 160 – 172; அதிமுக கூட்டணி 58 – 70.

கேரளா:

மொத்தமுள்ள தொகுதிகள் 140. ஆட்சி அமைக்க 70 எம்,எல்.ஏ.க்கள் தேவை.

இண்டியா டுடே – ஆக்சிஸ்: இடதுசாரி முன்னணி: 104 – 120; காங்கிரஸ் கூட்டணி 20 – 36.

ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ்: இடதுசாரி முன்னணி: 72 – 80; காங்கிரஸ் கூட்டணி 58 – 64

ஏபிபி – சி வோட்டர்: இடதுசாரி முன்னணி: 71 – 77; காங்கிரஸ் கூட்டணி 62 – 68

மேற்கு வங்காளம்:

மொத்தமுள்ள தொகுதிகள் 294. ஆட்சி அமைக்க 148 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

டைம்ஸ் நவ் – சி வோட்டர்: திரிணாமுல் காங்கிரஸ் 158; பாஜக 115; இடதுசாரி – காங். கூட்டணி 19.

ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ்: திரிணாமுல் காங்கிரஸ் 128 – 133; பாஜக 138 – 143; இடதுசாரி – காங். கூட்டணி 11 – 21.

பி மார்க்: திரிணாமுல் காங்கிரஸ் 158; பாஜக 138 – 120; இடதுசாரி – காங். கூட்டணி 14.

இடிஜி ரிசர்ச்: திரிணாமுல் காங்கிரஸ் 169; பாஜக 138 – 110; இடதுசாரி – காங். கூட்டணி 13.

ஜன் கி பாத்: திரிணாமுல் காங்கிரஸ் 112; பாஜக 174; இடதுசாரி – காங். கூட்டணி 6.

புதுச்சேரி:

மொத்தமுள்ள தொகுதிகள் 30. ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ்: பாஜக கூட்டணி 16- 20; காங்கிரஸ் கூட்டணி 11 – 13.

ஏபிபி – சி வோட்டர்: பாஜக கூட்டணி 19 – 23; காங்கிரஸ் கூட்டணி 6 – 10.

அசாம்:

மொத்தமுள்ள தொகுதிகள் 126. ஆட்சி அமைக்க 64 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

ஏபிசி – சி வோட்டர்: பாஜக கூட்டணி 58 – 71; காங்கிரஸ் கூட்டணி  53 – 66.

இண்டியா டுடே – ஆக்சிஸ்: பாஜக கூட்டணி 75 – 85; காங்கிரஸ் கூட்டணி  40 – 50