போலி சான்று கொடுத்து உச்ச நீதிமன்றத்தை தேர்தல் ஆணையம் ஏமாற்றியது அம்பலம்!
வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும். அதைதான் பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது, இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறது என்று நாட்டிலுள்ள 21 முக்கியமான தேர்தல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் ஒன்றை கடந்த மாதம் கொடுத்திருந்தார்கள்.
ஆனால் தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆகவே அந்த 21கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தை ஐ.எஸ்.ஐ நிறுவனத்தின் தலைமையால் முழுவதுமாக சோதனை செய்து அதற்கு ஐ.எஸ்.ஜ சான்று வாங்கவேண்டுமென்று கூறியது.
அதன்படியே தேர்தல் ஆணையமும் கல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் இந்த சோதனையை மேற்கொண்டதாகவும் இந்த சோதனையில் 479 வாக்குகள் பதியப்பட்டு யாருக்கு வாக்களிக்கப்பட்டதோ அவர்களுக்கான உறுதி சான்று சரியாக வந்ததாகவும் அதனால் ஐ.எஸ்.ஐ சான்று வழங்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வாக்கு இயந்திரம் பாதுகாப்பானது தான் என்று சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கொடுத்துவிட்டது.
அதன்பின் தற்போது முன்று கட்ட தேர்தலும் முடிந்த நிலையில் எதிர்கட்சிகளின் சார்பில் இந்த வழக்கை நடத்தியவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ப்படுத்தினார்.
”நாங்கள் மார்ச் 13, 2019 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக ஐ.எஸ்.ஐ தரச்சான்று நிறுவனத்திடம் வாக்கு இயந்திரத்தை எவ்வாறு சோதனையிட்டு சான்று அளித்தீர்களென்று கேட்டிருந்தோம்.
அதற்கு நாங்கள் சோதனையிட்டபோது வாக்களித்த சின்னமும் அதனை உறுதி செய்து வந்த சீட்டில் இருந்த சின்னமும் வெவ்வேறாக இருந்தது. எனவே நாங்கள் அதிர்ச்சியடைந்து அதற்கு சி.எஸ்.ஐ சான்று அளிக்கவில்லை என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.
ஆனால் தேர்தல் ஆணையம் போலியாக ஒரு சான்றை வாங்கி அதனை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து நீதிமன்றத்தையே ஏமாற்றி இருக்கிறார்களென்று ஆதாரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவிடம் கேட்டபொழுது நாங்கள் இதை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் வேறு எங்கும் பேச விரும்பவில்லையென்று பதிலளித்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய மோசடி நாட்டில் நடந்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றி ஒரு வரிச் செய்திகூட எந்த ஊடங்களிலும் வந்ததாக தெரியவில்லை.
இப்படி போலியாக சான்று வாங்கி நீதிமன்றத்தை ஏமாற்ற வேண்டிய தேவை தேர்தல் ஆணையத்திற்கு ஏன் வந்தது? யாருக்காக இந்த வேலையை தேர்தல் ஆணையம் செய்கிறது? இப்போது தோல்வியடைந்த வாக்கு இயந்திரத்தை வைத்து மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டதே அதில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ? இதை கண்டும் காணாமல் ஊடகங்கள் ஏன் இவ்வளவு கள்ளமவுனம் காக்க வேண்டும்? இதனை மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றியிருக்கவேண்டிய எதிர்கட்சிகள் ஏன் மவுனமாக இருக்கிறது? என்னதான் நடக்கிறது இந்த நாட்டிலே…
Kondal samy
நன்றி: Justin Antony