செந்தில் பாலாஜி விடுதலையை திமுகவினர் ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்…
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள் அனைத்தும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு அந்த தொகுதியில் வெற்றி பெறலாம், ஏனெனில் அதிமுக வாக்குகள் அதிகம் இருப்பதால் எளிதில் வென்று விடலாம் என்ற கனவோடு ஊடகங்களுக்கு பணம் கொடுத்து ஊதிப் பெருக்கிய பிம்பத்தோடும் வார்ரூம் கோமாளிகளை வைத்து பெரு பில்டபோடும் தேர்தலை சந்தித்த அந்த அரைவேக்காடு ஆடு தோல்வியை தழுவியது. காரணம் செந்தில் பாலாஜி தேர்தல் யுக்தி. கரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் திமுகவுக்கு வென்று கொடுத்தார். செந்தில் பாலாஜி உழைப்பை உணர்ந்த முதல்வர் உடனடியாக கோவை மாவட்ட பொறுப்பாளராக அவரை நியமிக்கிறார். அப்போது கோவை மாநகராட்சி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி என்ற இரண்டு மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்று களத்தில் நின்ற பாஜக ஆட்டுக்குட்டியை கோவையில் ஒற்றை இலக்கத்தோடும் குரியிலும் தோல்வியை தழுவியது.
அப்போது நடந்த ஈரோடு இடைத்தேர்தல் தான் அதிலும் கூடுதலாக செந்தில் பாலாஜி மீது ஆடு உட்பட அந்த கட்சியினருக்கு எரிச்சலைக் கொடுத்தது. பட்டி பிரச்சாரம் என்று ஒரு புதிய உத்தியை கையாண்டு எடப்பாடி பழனிசாமியை கொதித்தெழ வைத்தது. பழனிசாமி வாக்கு கேட்கப் போகும் தெருக்கள் அனைத்தும் காலியாக இருக்கும். தன்னோடு வாக்கு சேகரிக்க கூட ஆள் கிடைக்காமல் அண்டை மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துற என்று யாரும் கேட்காத வண்ணம் கூட்டத்தை தன்னோடு போகும் இடத்தில் எல்லாம் கூட்டிப் போய் பிரச்சாரத்தை முடித்தார். வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணி கூட்டணிக் கட்சியான தமாகவிடம் இருந்து வாங்கி போட்டியிட்ட பழனிச்சாமி கனவு கனவாகவே போனது.
இவை அனைத்தையும் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு சென்று குஜராத்கிட்ட போய் சொல்லி வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் செந்தில் பாலாஜி வெளியே இருக்கக் கூடாது என்று வைத்த கோரிக்கையை ஏற்று தன்னுடைய ஏவல் துறையான ED யை வைத்து கைது செய்தது. அரவக்குறிச்சி அரைவேக்காடு போட்ட பிளான்படி கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். சாம்சங் ஊடகவியாபாரிகள் மற்றும் வாய் ரூம் கோமாளிகள் ஆடு தான் வெற்றி என்று தம்பட்டம் அடித்தாலும் கள நிலவரத்தை புரிந்து கொண்ட ஆடு ஒரு கட்டத்தில் ஊடகத்தில் வெளிப்படையாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே வேலை செய்கிறார் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தோல்வி அடைந்த ஆடு மீண்டும் தனது எஜமானர்களை வைத்து அவரை வெளியே விடாமல் செய்தது.
இதே செந்தில் பாலாஜி மட்டும் பாஜகவில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தால் மட்டும் போதும் அஜித் பவார் போன்று வழக்கும் இருந்திருக்காது. இத்தனை நாள் சிறையில் இருக்க வேண்டிய தேவையும் இருக்காது. ஆனால் அவர் செய்யவில்லை. கூடவே திமுக துணையிருந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. இறுதியாக ஜாமீனில் நேற்று வெளியே விட்டிருக்கிறார்கள். வழக்கம் போல ஒன்றிய ஏவல் துறையான ED இதுவரை எதையும் நிரூபிக்கவில்லை என்பது தான் உண்மை. முடிந்த ஒரு வழக்கை தோண்டி எடுத்து இத்தனை நாட்கள் சிறையில் வைக்க காரணம் மேற்சொன்ன தேர்தலில் தண்ணி காட்டியதால் தான் என்பதை திமுகவினர் அனைவரும் உணர்ந்துகொண்ட காரணத்தால் தான் நேற்று பட்டாசு வெடித்து காலை முதலே கொண்டாடினார்கள். மாலையில் சிறை முன்பு சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்தனர். முதல்வர் உன் தியாகம் பெரிது உறுதி அதனினும் பெரிது என்று வரவேற்றுள்ளார்.
இதில் செந்தில் பாலாஜி தியாகியா என்று அடிமைகள் கூட்டத்தை சேர்ந்த பலரும் நேற்றைய தினம் பொங்கியதைக் காண முடிந்தது. ஆனால் ஜெயலலிதா கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்ட போது காவிரியை நீயே வைத்துக்கொள் எங்கள் தாயை எங்களிடம் கொடுத்துவிடு என்று போஸ்டர் ஒட்டிய கூட்டம் தான் அது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்று ஜெயலலிதா வந்தபோது இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து கடந்தகாலத்தில் கொண்டாடிய அடிமைகள் அதை எல்லாம் மறந்திருப்பார்கள் போல. அடுத்தது இதே கேள்வியை கேட்ட புரோக்கர் சீமான் அவர்கள் தான் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் போய் சந்தித்து நான் வேணா புரோக்கர் வேலை பார்க்கட்டுமா என்று கேட்டதாக அவரே கூறியுள்ளார்.
ஆகவே இத்தனை நாள் இருதய நோயாளி என்று கூட பார்க்காமல் சிறை வைத்த பிறகும் உறுதியுடன் வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுகவினர் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை…
-குமரி ஒய் ஆர் ராஜ்