மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கை: சில முக்கிய அம்சங்கள்

2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்படும் வகையில், இணை ஆட்சிமொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தம்
* விவசாய துறைக்கு தனி பட்ஜெட் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி பெற பாரபட்சமில்லாமல் நிதி பங்கீடு
* மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

* தனி நபர் வருமானத்தை ரூ.1.50 லட்சமாக உயர்த்திட நடவடிக்கை
* நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும்.
* காஸ் சிலிண்டருக்கான மானிய தொகை, வங்கியில் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் மாற்றப்படும்.
* தென் இந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை.
* மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி, மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
*நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
* குறைந்தபட்ச வேலை உறுதியளிப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
* மாணவர்களின் கல்விக்கடன்முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை.
* தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10வது வரை படித்துள்ள 1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
* தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் 10வது வரை படித்த 50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
* கிராம பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தொழில் துவங்க 50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்
* அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அமைக்கப்படும்.
* நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து
* பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் சலுகை
* மதுரை, திருச்சி, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்
* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும்
* சமூக வலைதளங்களில் ஆபாச செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்
* சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
* மத்திய மாநில அரசுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
* பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம்
* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்
* பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
* சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கார்ப்பரேட் நிறுவனங்களில் 10 ஆயிரம் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* உடல் உறுப்புகள் மற்றும் பாலியல் தொழிலுக்காக ஆட்கள் கடத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை.