Thursday, August 7, 2025
heronewsonline.com

heronewsonline.com

  • Home
  • News
  • CineNews
  • Views
  • Reviews
  • Gallery
  • Videos
  • In English
News Slider 

விவாகரத்து கோரி அமலாபால் – விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

August 6, 2016August 7, 2016 admin actress, amalapaul, breakingnews, Director, divorce, exclusivenews, family court, in, petition, submitted, vijay

இயக்குநர் விஜய் – நடிகை அமலாபால் இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மத்த்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சமீபநாட்களாக செய்திகள் வெளியாகின.

திருமணத்துக்குப் பிறகு அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதால், இது விஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை மறுத்த விஜய், “நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே” என்று அறிக்கை வெளியிட்டார். மேலும், “நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது” என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, நம்பிக்கை துரோகமும், நேர்மையின்மையும் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்பது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், விஜய்யும், அமலாபாலும் இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதி தீபிகா முன்னிலையில் இருவரும் விவகாரத்து செய்யப் போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தனர். இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய் -அமலாபால் விவகாரத்து கோரி நீதிமன்றம் சென்றிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ← “வியட்நாம் வீடு’ திரைப்படம் மூலம் சுந்தரம் எப்போதும் நினைவு கூரப்படுவார்!”
  • “சினிமாவில் தைரியமாக அரசியல் பேசணும்!” – ‘ஜோக்கர்’ இயக்குனர் →

You May Also Like

பைரவா – விமர்சனம்

January 12, 2017

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ சென்ற மு.க.ஸ்டாலின்!

October 8, 2016

மேடையில் ’கள்’ குடித்த சீமான்: கிராபிக்ஸ் புகைப்பட சர்ச்சை குறித்து பதிலளிக்க மறுப்பு!

January 21, 2025

Latest Updates

ரத்தம், வன்முறை, பயங்கரம் இல்லாத ‘பேய் கதை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீடு!
CineNews Videos 

ரத்தம், வன்முறை, பயங்கரம் இல்லாத ‘பேய் கதை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீடு!

August 6, 2025 admin
”ரசிகர்களின் அன்பை என் சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்”: அஜித்குமார் அறிக்கை!
News Slider 

”ரசிகர்களின் அன்பை என் சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்”: அஜித்குமார் அறிக்கை!

August 4, 2025 admin
”அன்று தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக அழுதேன்”: ‘கூலி’ படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு!
News Slider 

”அன்று தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக அழுதேன்”: ‘கூலி’ படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

August 3, 2025 admin
உசிரே – விமர்சனம்
CineNews Reviews 

உசிரே – விமர்சனம்

August 3, 2025 admin
போகி – விமர்சனம்
CineNews Reviews 

போகி – விமர்சனம்

August 3, 2025 admin
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்
CineNews Reviews 

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்

August 2, 2025 admin
சரண்டர் – விமர்சனம்
CineNews Reviews 

சரண்டர் – விமர்சனம்

August 2, 2025 admin
அக்யூஸ்ட் – விமர்சனம்
CineNews Reviews 

அக்யூஸ்ட் – விமர்சனம்

August 2, 2025 admin
‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநருக்கு ஒன்றிய அரசு விருது: கேரள முதல்வர் கண்டனம்!
News Slider 

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநருக்கு ஒன்றிய அரசு விருது: கேரள முதல்வர் கண்டனம்!

August 2, 2025 admin
ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம்
CineNews Reviews 

ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம்

August 1, 2025 admin
கிங்டம் – விமர்சனம்
CineNews Reviews 

கிங்டம் – விமர்சனம்

August 1, 2025 admin
சூரியின் “மாமன்” திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி  ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!
CineNews 

சூரியின் “மாமன்” திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!

July 31, 2025 admin
”கிங்டம்’ ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்”: சென்னையில் நாயகன் விஜய் தேவராகொண்டா!
CineNews 

”கிங்டம்’ ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்”: சென்னையில் நாயகன் விஜய் தேவராகொண்டா!

July 29, 2025 admin
இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
News Slider 

இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

July 28, 2025 admin
மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்
CineNews Reviews 

மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்

July 28, 2025 admin
Copyright © 2025 heronewsonline.com. All rights reserved.