இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – ஈஸ்வரி ஷங்கர் தம்பதியரின் மூத்த மகள் டாக்டர் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், கே.கார்த்திகேயன் –சப்னா கார்த்திகேயன் தம்பதியரின் மகன் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
இத்திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள் வருமாறு:
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், பாரதிராஜா, மணிரத்னம் – சுஹாசினி, கே.பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி – ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் – அனுவர்தன், விக்னேஷ் சிவன் – நயன்தாரா, ரவி குமார், கீர்த்தி சுரேஷ், நாசர் – கமிலா நாசர், ஜீவா, சித்தார்த், அதிதி ராவ்,
ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்ரத்னம், தில் ராஜு, ஐசரி கணேஷ், ராஜசேகர் (2D), திருப்பதி பிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், ரவி கே சந்திரன், ரவிவர்மன், ஜி.கே.விஷ்ணு, பிரியா ஆனந்த், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, செந்தில், விஜய்குமார், சமுத்திரகனி, பிரியா அட்லி, அன்பறிவு, நகுல், சுனில், உண்ணி கிருஷ்ணன், ராம்குமார், சாந்தனு பாக்யராஜ், ஶ்ரீகாந்த், ரவிகிருஷ்ணா, அஜய் ரத்னம், ஶ்ரீகர் பிரசாத், தாமு, வையாபூரி சேத்தன் – தேவதர்ஷினி மற்றும் பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குநர்கள் லிங்குசாமி, அட்லி, வசந்தபாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.