இயக்குனர் பாலா அழைக்கிறார்: “நடிக்க விரும்பும் இளம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்!”
இயக்குநர் பாலா அடுத்து புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இதற்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலா சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 16 வயது முதல் 20 வயது வரையுள்ள சினிமாத் துறையில் அனுபவம் உள்ள அல்லது அனுபவம் இல்லாத பெண்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலா படத்தில் நடிப்பதற்குரிய திறமை உங்களிடம் இருந்தால் eonstudioscasting@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரக் குறிப்புகள் அனுப்ப வேண்டும். நடிப்பில் அனுபவம் உள்ளவர்கள் அதற்குரிய விவரங்களையும் இணைத்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: நவம்பர் 26, 2016 காலை 12 மணிக்குள்.