சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை – தனுஷ்?
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/09/0a-31.jpg)
வெங்கட் பிரபு இயக்கிய ‘கோவா’ படத்தை தயாரித்ததோடு, இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் 3டி படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
அவர் அடுத்து இயக்க இருக்கும் படத்தை, ‘கபாலி’ வெற்றிப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் எனறு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதன் கதை, திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதுகிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, வருகிற டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.