பிரபுதேவா நடிப்பில் விஜய் இயக்கும் ‘தேவி’ செப். 9ஆம் தேதி ரிலீஸ்!
பிரபுதேவா – தமன்னா நடிப்பில் விஜய் இயக்கும் படம் ‘தேவி’ இந்த திரைப்படத்தை பிரபுதேவாவும், அவருடன் இணைந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் டாக்டர். கணேஷும் தயாரித்து வருகின்றனர்.
‘ஆரா சினிமாஸ்’ இப்படத்தை தமிழ்நாடு அளவில் விநியோகம் செய்கிறது.
“தேவி’ படத்தின் அனைத்து இறுதிக்கட்ட வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு மும்மொழி திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிடுவது என்பது சற்று கடினமான காரியம் தான். இருந்தாலும் எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒற்றுமையால் அதை நாங்கள் வெகு சிறப்பாக செய்து வருகிறோம்.
“இந்த வருடத்தின் சிறப்பான நாளான 9.9.2016 அன்று எங்கள் ‘தேவி’ படத்தை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்கிறார் இயக்குனர் விஜய்.