11 மாடி கட்டிடம் மூன்றே நொடிகளில் தகர்ந்து தரைமட்டம் ஆனது – வீடியோ

சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், ‘பிளாக் பி’ என்ற 11 மாடி கட்டிடம், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர்.

அதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டிடம் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் அதை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அந்தக் கட்டிடம் இன்று பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் முழுமையாக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மழையின் காரணமாக இரவு 6.50 மணிக்கு கட்டிடம் இம்ப்ளோசன் என்ற நவீன தொழில்நுட்பத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

கட்டிடத்தின் தூண்கள் அனைத்திலும் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்ததால், ரிமோட்டை இயக்கிய 3 வினாடியில் மௌலிவாக்கம் கட்டிடம் தரைமட்டம் ஆனது. கட்டிடம் இடிந்ததும் மவுலிவாக்கம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

தமிழகத்தில் 11 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது இதுவே முதல்முறை.

வீடியோ:

https://youtu.be/gOzIY3R3Eq8