“பசு எனக்கு மாதா அல்ல; மாடு மட்டும் தான்!”

“பசு மாடு மாதா மாதிரி. நமக்கு, குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறது. வயதான பசு மாட்டை கசாப்புக் கடைக்கு அனுப்புவது போல், தாய் வயதானால் கசாப்புக் கடைக்கு அனுப்புவீர்களா?”

பதில்:

பசு மாடு நமக்கு, குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில்லை. நாம் தான் அதன் கன்றுக்குட்டிகளுக்காக சுரக்கும் பாலை திருடி குடிக்கிறோம்..

பால் கொடுக்கிறதுனால மாதான்னா, இன்றைக்கு குடிக்கும் பாலில் 80 சதவீதம் எருமை பால்தான். அதனால எருமையை தான் மாதா என்று அழைக்கணும்.

என் தாயை நான் உடை இல்லாமல், புறவாசலில், அவளின் சாணி மேலேயே தூங்க விடுவதில்லை.

நல்ல காளையாகப் பார்த்து ஒவ்வொரு முறையும் வேறு வேறு காளையுடன் இணை சேர்ப்பதில்லை.

தாயின் பாலைக் கறந்து பால் பண்ணை வைத்து யாவாரம் செய்வதில்லை.

குத்துக்கல்லுக்கு தாயின் பாலை ஊற்றி குளிப்பாட்டி வீணாக்குவதில்லை.

தாயின் பாலில் தயிர், மோர், நெய், பால்கோவா என்று விதம் விதமாக செய்து சாப்பிடுவதில்லை.

எனவே, பசு எனக்கு மாடு மட்டும்தான்.

உனக்கு மாதா என்றால், மேலே சொன்ன விஷயங்களை எதுவும் செய்யாமல், உன் வீட்டு பெட்ரூமில் வைத்து பாதுகாத்துக் கொள். அப்பால வந்து கூவு.

Courtesy: Manitham Mattun