தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்!
இந்தியா முழுவதும் 170 மாவட்டங்களை – ‘கொரோனா தீவிரமாக பாதித்த பகுதி’களாக – சிவப்பு மண்டலமாக – ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்களை – கொரோனா மிதமாக பாதித்த பகுதி’களாக – ஆரஞ்சு மண்டலமாகவும், 353 மாவட்டங்களை – கொரோனா பாதிக்காத பகுதிகளாக – பச்சை மண்டலமாகவும் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. மராட்டியத்தில் 14, உத்தரபிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 12, ஆந்திராவில் 11, டில்லியில் 10 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் அதிக பாதிப்புக்குள்ளான (சிவப்பு மண்டல) ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களின் பட்டியல் வருமாறு:
1.சென்னை 2.திருச்சி 3.கோவை 4.நெல்லை 5.ஈரோடு 6.வேலூர் 7.திண்டுக்கல் 8.விழுப்புரம் 9.திருப்பூர் 10.தேனி 11.நாமக்கல் 12.செங்கல்பட்டு 13.மதுரை 14.தூத்துக்குடி 15.கரூர் 16.விருதுநகர் 17.கன்னியாகுமரி 18.கடலூர் 19.திருவள்ளூர் 20.திருவாரூர் 21.சேலம் 22.நாகை
தமிழகத்தில் மிதமான பாதிப்புக்கு உள்ளான (ஆரஞ்சு மண்டல) ‘நான் ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் பட்டியல் வருமாறு:-
1.தஞ்சை 2.திருவண்ணாமலை 3.காஞ்சீபுரம் 4.சிவகங்கை 5.நீலகிரி 6.கள்ளக்குறிச்சி 7.ராமநாதபுரம் 8.பெரம்பலூர் 9.அரியலூர்
தமிழகத்தை பொறுத்தமட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இதுவரையில் இல்லை. எனவே இவை பச்சை மண்டல பகுதிகள்.
புதுச்சேரி மற்றும் மாஹி அதிகம் பாதிக்காத (ஆரஞ்சு மண்டல) ‘நான்ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன