இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தீர்மானம்
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (09-10-2023) டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நில உரிமை, கண்ணியம், மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இருதரப்புக்கும் காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஒன்றிய அரசு இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.