ரஜினியின் ‘கபாலி’ டீஸர் – விமர்சனம்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் அதிகாரபூர்வ டீஸர் இன்று பகல் 11 மணிக்கு யூட்யூப்-ல் வெளியிடப்பட்டது. இந்த டீஸரை கண்டு களிப்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலரது சமூக வலைத்தள பதிவுகள் இதோ:-
# # #
எழிலரசன்: தமிழ்த்திரைப்படங்களாலும் பத்திரிகைகளாலும் மேட்டுக்குடியினராலும் கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கும் பெயர் ‘கபாலி’! கபாலி என்ற பெயருள்ள நபர் எப்போதும் கைலி கட்டி அதன் மேல் பச்சை பட்டை பெல்ட் போட்டுக்கொண்டு அடியாளாக ரவுடியாக குப்பத்தில் இருப்பார் என்ற பிம்பத்தை உடைத்து கபாலிக்கு கோட் சூட் அணிவித்து கெத்து காட்டியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டலாம்!
படத்தில் தனக்கேயுரிய ஸ்டைலான சிரிப்போடு “கபாலினா என்ன மருவும் மீசையும் வச்சிக்கிட்டு கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி நிற்குற ஆள்னு நினைச்சிட்டியா? இது கபாலிடா” என்று ரஜினி பேசும் வசனம் உண்மையாகவே அதிர வைக்கிறது!
# # #
ஜெயசந்திர ஹஷ்மி: கபாலி’ லாம் வில்லனுக்கு வக்கற பேரு. அதெல்லாம் ரஜினி படத்துக்கு வக்கலாமா?
‘கபாலி’ என்ற பெயர் வைக்கப்பட்டவுடன் ஒரு நண்பன் கேட்டது.
‘அதுக்காகத்தான்டா இந்த பேரே வச்சுருக்காங்க’ என்றேன்.
டீசர்லயே நறுக்குனு பதில் இருக்கு.
பாருங்க… இது சர்வ நிச்சயமா அரசியல் படம்தான். மகிழ்ச்சி!!!
# # #
ராஜசங்கீதன் ஜான்: செம்ம… செம்ம..
‘நம்பியார்’ டயலாக் ரஜினி ஸ்டைல்னா, ‘மகிழ்ச்சி’ ரஞ்சித் ஸ்டைல்.
‘நம்பியார்’களின் அடியாட்களாக இருந்த கபாலிகள், திருப்பி அடித்து “கபாலிடா”க்களாக மாற வேண்டுமென்கிற அசத்தலான அரசியல் வேற!
அதுலயும், Godfather படத்துல Michael Corleone போலீஸை சுட்டுட்டு, ஹோட்டலவிட்டு வெளியேறுற பாணியில, பழைய ரஜினி ஹோட்டலவிட்டு வெளியே வர்றதெல்லாம் மரண மாஸ்.
ஸோ வெயிட்டிங்!
# # #
எவிடன்ஸ் கதிர்: கபாலிடா என்பதற்கும் கபாலி…டா என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. அது என்னவென்றால், அடிக்காதிங்க என்பதற்கும், அடித்தால் திருப்பி அடிப்பேன் டா… என்பதற்குமான வேறுபாடு. வாழ்த்துகள் ரஞ்சித்.
# # #
# # #
வாசுகி பாஸ்கர்: டைம் லைன் பூரா கபாலி! அந்த மனுஷனுக்கு தான் அது சாத்தியம். மகிழ்ச்சி.
# # #
சுரேஷ் கண்ணன்: சில நட்சத்திரங்கள் திரையில் தோன்றியவுடன், ஏன் படம் முடியும் வரையிலும் கூட ஹை-வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல திரை அதிர்ந்து கொண்டேயிருக்கும். பழைய காலத்தில் எம்.ஜி.ஆரை அப்படிச் சொல்வார்கள். ஆனால் என்னளவில், என் ரசனைப்படி, நான் உணர்ந்தவரை அது ரஜினி மற்றும் அஜித்திற்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. ‘சாமி’ விக்ரம், ‘சிங்கம்’ ‘காக்க காக்க’ சூர்யா போல இன்னபிற உதாரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான உதாரணங்களாக இவர்கள் இருவரை மட்டுமே சொல்ல முடியும்.
கபாலி டீஸரிலும் அந்த மேஜிக்கை உணர முடிகிறது. ‘எத்தனை வயசானாலும் உன் ஸ்டைலும் வேகமும்’ குறையவேயில்லை’ என்கிற படையப்பா வசனம் இன்னமும் செல்லுபடியாகிறது. அரசியல் குழப்படி நோக்கில் ரஜினி காமெடி பிம்பமாகியிருந்தாலும் அவருடைய திரை பிம்பத்தின் அந்தஸ்து இன்னமும் கூட பெரிதும் சேதாரம் ஆகாமல் இருக்கிறது என்பதற்கு இந்த டீஸர் உதாரணம்.
டீஸரை வைத்து இந்தக் கருத்தை சொல்வது சரியில்லைதான் என்றாலும் ஏறத்தாழ ரஜினி படங்களின் பொதுவான சாயலையே இது கொண்டிருப்பது மட்டுமே உள்ளூற சற்று நெருடலாக இருந்தது. இதுகூட அதன் இயக்குநர் ரஞ்சித்தாக இருப்பதால்தான். படம் வரட்டும். ரஞ்சித் தன் தனித்தன்மையை நிச்சயம் பதிவு செய்திருப்பார் என்கிற நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை.
# # #