‘கபாலி’ பற்றி சோ: “ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி!”
நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான நடிகர் சோ ராமசாமியுடன் சேர்ந்து செவ்வாயன்று மாலை ‘கபாலி’ திரைப்படம் பார்த்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘ஃபோர் பிரேம்ஸ்’ பிரிவியூ திரையரங்கில் இதற்கான சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘கபாலி’ படம் பார்த்தபிறகு கருத்து தெரிவித்த சோ, படம் நன்றாக வந்திருப்பதாகவும், ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். ரஜினி தனது நண்பராக கிடைத்ததில் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அப்போது ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.