விநாயகர் சதுர்த்தி: வெள்ளத்தில் முஸ்லிம்கள் செய்த உதவியை நினைச்சு பாருங்க!

விநாயகர் ஒரு அழையா விருந்தாளி. நமது பூசையறைக்குள் நுழைந்த அந்நிய தெய்வம்.
இவரை வைத்து இஸ்லாம் சகோதரர்களை பயமுறுத்தும் இந்துத்துவா அக்கிரமங்கள், தமிழர்தம் பண்பாட்டு இழிவாகக் கருதப்பட வேண்டியவை.
பாலும் தெளிதேனும் பருப்பும் வைத்துப் படைத்தால் தமிழ் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் சைன்ஸும் சொல்லிக் கொடுக்கிற வல்லமை படைத்தவராம் நம் வாதாபி கணேசன்.
இவரது உருவம், இவர் குறித்த கதைகளெல்லாம் மாந்திரீக யதார்த்தம்.
ஆனாலும், வேகவைத்த பருப்பும் வெல்லமும் சேர்த்து பூவரச இலையில் மணக்கும் கொழுக்கட்டை ருசியோ சங்க இலக்கியம்!
– கரிகாலன்
# # #
வினாயகர் சதுர்த்தி கொண்டாடிட்டு போங்க. வேணாங்கல. ஆனா, மசூதி பக்கமா கூட்டிபோயி உங்கள கத்த விடணும்னு திட்டம் போட்ருப்பானுங்க காவி டவுசருக.
அப்போதைக்கு ஒருவாட்டி சென்னை, கடலூர் வெள்ளத்துல பாய்க செஞ்ச உதவிய நெனச்சு பாத்துக்கிடுங்க. அந்தநேரம் இவனுங்க வீட்டுக்குள்ள ஒக்காந்து யாகம் வளத்துக்கிட்டு இருந்தானுங்க.
– Anbe Selva
– Anbe Selva