மறு உத்தரவு வரை தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் ஆணை!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/10/0a1-45.jpg)
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்துக்கு தினசரி 2,000 கன அடி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தங்களது அக்டோபர் 4-ம் தேதி உத்தரவை நீட்டித்து தமிழகத்துக்கு தினமும் 2,000 கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு குறித்து கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் செய்துள்ள மேல்முறையீடுகள் முதலில் பராமரிக்கக் கூடியதுதானா என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்ட பிறகே பிற முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ஜா குழு அறிக்கை மீது ஆட்சேபணை இருந்தால் அக்டோபர் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.