மாட்டுக்கறி தடை போல் ஒரு கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை!
ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு உண்டு. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவன் நான். என் குடும்பம், பரம்பரை அப்படியே. ஆதி தமிழர் வழிபாடு எல்லாம் உண்டு. வீட்டில் பூஜை அறையில் இல்லாத தெய்வங்கள் இல்லை. விரும்பி கோவில்களுக்குச் செல்வோம், எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். பசு வழிபாடு உண்டு. அதை தெய்வாம்சமாக கருதுவோம். பரம்பரையாக மட்டன், மீன், கோழி, முதலான இறைச்சி சாப்பிட்டு வந்தாலும், மாட்டுக்கறி மட்டும் உண்பது கிடையாது. எங்கு சென்றாலும், அது பீஃப் இல்லையா என்பதில் கவனமாக இருப்போம்!!
இந்த சுயபுராண மொக்கை இன்ட்ரோ எதற்கு என்றால்… Having said all the above, Ban on Beef Meat is the most silly crappiest decision. அதாவது, எங்கள் வீட்டில் அனைவருமே கருதும் விசயம், மாட்டுக்கறி தடை போல ஒரு கேவலமான விசயம் ஒன்றுமில்லை!
அடுத்தவன் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை!!!!
ஒரு வயதிற்கு மேல் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பெற்றோரே தீர்மானிக்க முடியாத பட்சத்தில், சுண்டைக்காய் தடை போட நீங்கள் யார்??
மான், கொக்கு, மடையான், கவுதாரி, உடும்பு.. இதெல்லாம் நம் குடும்பங்களில் சமைத்து சாப்பிடபட்டவை தான். கொக்கு, மடையான் வகைகள் நானே சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன். இவைகளை தடை செய்ததில் ஒரு அர்த்தம் இருக்கு. These are not petted. அதாவது, மனிதனால் அவைகளை உற்பத்தி செய்ய முடியாது, அதனால அதை அழிக்க உரிமை இல்லை. These are not Livestock. அதனால இவைகள் முற்றிலும் அழிந்துவிடும் பாதிப்பு உண்டு. இவைகளை உண்பதை தடைசெய்தது சரியே – இயற்கை நலன் கருதி.
ஆடு, மாடு, கோழி, பன்றி இதெல்லாம் நம் நாட்டில் மனிதனால் உற்பத்தி செய்யப்படுபவை. Livestock. மனிதனால் மனிதனுக்கு மனிதனுக்காக வளர்க்கப்படுபவை. அதை உபயோகிக்க உரிமையாளருக்கு எல்லா உரிமையும் உண்டு. இது அடிப்படை. அடிப்படை அறிவு இல்லையென்றால் தான் இதற்கு தடை விதிக்கப்படும்!!!
அது சரி, மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது.. அப்போ தோல் உற்பத்தி, ஏற்றுமதி இதெல்லாம்?? அல்லது தோலுக்காக மாட்டை கொன்று, இறைச்சியை தெருவில் கொட்டுவதா??
பால் உற்பத்தி எப்படி ஆகுது?? மாடுகளாக வந்து எடுத்துக்கோ என்று சொன்னதா??
நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு…. அதெல்லாம் விட்டுவிட்டு இந்த தடை கருமமெல்லாம் எதுக்கு??
இந்த ஆணையை படித்ததில், இது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதற்கான புதிய திட்டம் என்பதில் எனக்கு பெரிய சந்தேகமே உள்ளது. வெளிநாட்டு கார்ப்பரேட் சதிவலை வேலையை காட்டுகிறதோ என்று தோன்றுகிறது….
மக்கள் எத்தனை பிரச்சனைகளுக்கு தான்யா போராடுறது!???!
ரா.ராஜகோபாலன்