“பெருந்தன்மையாக காத்திருந்தவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறது மோடி அரசு!”
கையில் சில்லறை இருந்ததால் கூட்டத்தில் முண்டியடிக்காமல் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். என்றாலும், கூட்டம் ஏற்படுத்திய செல்வாக்கில் நானும் இடையில் முந்திக் கொண்டேன். ‘பந்திக்கு முந்து’ என்கிற பழமொழி உண்மையாயிற்று.
இப்போது பாருங்கள். மாற்ற வேண்டிய பணத்தை ரூ.2000 ஆக குறைத்திருக்கிறார்கள். எனில், இலவு காத்த கிளி மாதிரி நான் காத்திருந்தால் ஏமாளியாகியிருப்பேன். இப்போது அப்படி காத்திருப்பவர்களும் ஏமாளிகள்தான்.
“பதட்டப்படாதீர்கள். கையில் சில்லறை நோட்டு இருப்பவர்கள் பிறகு செல்லுங்கள். தேவைப்படுபவர்களுக்கு வழிவிடுங்கள்” என்றெல்லாம் உபதேசம் செய்த அரசு, இப்போது அவ்வாறு பெருந்தன்மையாக காத்திருந்தவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறது.
“எதற்காக இத்தனை பதட்டம்” என்று உபதேசம் செய்தவர்களும் கவனிக்க வேண்டிய விஷயம் இது.
ஆக.. இனி புது அறிவிப்பு என்றால் முந்திக் கொள்பவர்களுக்குத் தான் அதிக சலுகை என்கிற நெருக்கடியை அரசே உருவாக்குகிறது. எனில், அந்த மனோபாவம் இனி அதிகமாகுமே தவிர குறையாது.
முறையான முன்னேற்பாடுகள், திட்டங்கள் ஏதுமில்லாமல்….
…. நிறுத்துங்க… சும்மா குறை சொல்லிக்கிட்டு… எல்லையில் நமது ராணுவ வீரர்கள்… எப்படியெல்லாம்..
தேசபக்தி… தேசபக்தி….
எம்.ஏ. பிலாஸபி… எம்.ஏ. பிலாஸபி…
Suresh Kannan