பார்ப்பன ‘சிந்தனை தொட்டி’யில் நிரம்பி வழிகிறது சாக்கடை…!

”அதான் அனிதாவோட அண்ணன்லாம் படிச்சிருக்காங்கல்ல… அவங்க எடுத்து சொல்லியிருக்கலாமே’’ என்று கேட்கிறார் ஞாநி சங்கரன்.

அனிதாவின் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அருவெருப்பான கார்ட்டூன் வரைகிறார் குருமூர்த்தி.

“ப்ளூவேல் கேம் போல இது Dravidian whale game.. உஷாரா இருங்க” என எச்சரிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

“வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறதா?” எனக் கேட்கிறார் சுமந்த் சி.ராமன்.

“மாணவர்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதால் படிப்பு கெடுகிறது” என கண்ணீர் வடிக்கிறார் டி.என்.கோபாலன்.

“தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என சொல்லும் பத்ரி சேஷாத்ரி கூட, நீட் தேர்வு ஒரு சமூக அநீதி என்பதில் இருந்து இந்த முடிவுக்கு வரவில்லை. மாறாக, “தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் ஏற்கெனவே உள்ள முறை சிறந்ததென விரும்புகிறார்கள்.. அதனால்…” என ஒதுங்கி நின்று கை தட்டுகிறார்.

எஸ்.வி.சேகர் பற்றி கேட்கவே வேண்டாம். நாளொரு அவதூறு. பொழுதொரு பொங்கல்.

Brahmin Think Tank நிரம்பி வழிகிறது. எல்லாம் சாக்கடை.

BARATHI THAMBI