ஜெயம் ரவி – அரவிந்த்சாமி நடிக்கும் ‘போகன்’: டிசம்பர் வெளியீடு!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/09/0a1-22.jpg)
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘போகன்’. அவருடன் அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இதை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள். இருவருமே காக்கி உடையில் கலக்கியிருக்கிறார்களாம்.
‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி கதாபாத்திரம் போலவே இப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் கண்டிப்பாக பேசப்படும் என்று நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
“‘போகன்’ படத்தை பார்த்துவிட்டேன். மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயம் ரவிக்கு வெற்றிப்படமாக இப்படம் அமையும்” என்று தயாரிப்பாளர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது ‘போகன்’.