அடுத்த மக்களவை தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி தான்: அமித் ஷா அறிவிப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் அமித் ஷா பேசும்போது, ‘‘2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’’ என்று தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அளித்த பேட்டி ஒன்றில், ”உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அப்போதே 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. பிரதமர் மோடி தலைமையில் மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்ளும். கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கைப்பற்றி மத்தியில் பாஜக மீண்டும்ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளார்.