எதிர்க்கட்சி களின் ஒற்றுமை தொடர்ந்தால் வரும் மக்களவை தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வுவது உறுதி!

அடுத்த மக்களவை தேர்தலுக்கு 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமான ‘மினி பொதுத்தேர்தல்’ என வர்ணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி படுதோல்வி அடைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது கட்சித் தலைவர் அமித்ஷாவுக்கும் பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தேர்தல் நடந்த 4 மக்களவைத் தொகுதிகளில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சி நாகலாந்து மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஏனைய இரு தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் பறிகொடுத்திருக்கிறது பாஜக்.

11 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

மோடி – அமித்ஷா கும்பலின் அடாவடி ஆட்சிக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இத்தேர்தலைச் சந்தித்ததால் இந்த அமோக வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற்று தொடர்ந்தால், வரும் மக்களவை தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வுவது உறுதி!

இன்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள்:

0a1b