பாஜக-வும் நாதக-வும் வேறு வேறு அல்ல!
‘முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டாலும் ஓட்டுப்போட போவதில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கேவலம்கெட்ட ஒரு தர்க்கத்தை பேசுகிறார் சீமான். ஈழப் பிரச்னையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என 15 வருசமா பேசிட்டு திரியுறியேண்ணே… ஈழத் தமிழர் யாரும் திமுக-வுக்கு வந்து ஓட்டு போடுவாங்களா? இல்ல, ‘நாம் தமிழர்’க்கு ஓட்டு போடப் போறாங்களா?
‘எனக்கு ஆதாயம்னா உனக்காக பேசுவேன்’னா அப்போ இத்தனை வருசமா ஈழத்தை பற்றி பேசி நீங்க எவ்வளவு ஆதாயம் அடைஞ்சீங்க?
இதுல இன்னொண்ணு இருக்கு… ‘முஸ்லிம்க்கு குரல் கொடுத்து வேஸ்ட். ஓட்டு கிடைக்காது’ என்பதன் மூலம், என்னவோ இந்து வாக்குவங்கி இவருக்கு பொங்கி வழிவதை போல தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார். உண்மை அதுவல்ல… தேர்தல்தோறும் சீமான் டெபாசிட் இழப்பதே இதற்கு சாட்சி.
அதேநேரம் இந்த முஸ்லிம் வெறுப்பு மனம்போனபோக்கில் சொல்லப்பட்டதில்லை. தேர்தல் வேறு நெருங்குகிறது. இப்போ இப்படி ஓபனா அடிக்கிறார்னா, ‘முஸ்லிம் வெறுப்பை பொருத்தவரை பாஜக-வை விட, தமிழ்நாட்டில் நான்தான் பெஸ்ட்’ என நிறுவ நினைக்கிறார். இனி, ‘தமிழ் இந்துகள் வேறு. பாஜக சொல்லும் இந்து வேறு. தமிழ் இந்துக்கள் எல்லோரும் நா.த.க.வுக்கு ஓட்டு போடனும்’ என்பதை நோக்கி நகர்வார். இங்குள்ள பாஜக எதிர்ப்பு உணர்வை கொஞ்சம் தமிழ் உணர்வை மிக்ஸ் செய்து, தமிநாட்டின் பால்தாக்கரே பெருமகனாராக முயற்சிப்பார். இதுதான் அவருடைய ரூட் மேப்.
ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது பாஜக-வும் நா.த.க-வும் வேறு வேறு அல்ல. இரண்டையும் சம அளவில் வெறுக்கவும், ஒதுக்கவும் வேண்டியது தமிழர்களாக அல்ல… மனிதர்களாகவே நாம் செய்ய வேண்டிய கடமை.
Barathi Thambi