சட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடும் இழுபறிக்குப் பிறகு ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களைப் பிடித்து பின்தங்கியது.

பீகார் சட்டப்பேரவையின் பலம் 243 ஆகும். அந்த மாநில சட்டப்பேரவைக்கு அக்.28, நவ.3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. அதேபோல மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. இதுதவிர ராஷ்டிரிய லோக் சமதா, பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ஜனவாதி கட்சி, சுகல்தேவ் சமாஜ் கட்சி, ஜனதந்தரிக் ஆகிய கட்சிகள் இணைந்து மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரில் தனியாக போட்டியிட்டன.

வாக்கு எண்ணிக்கை

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூ பிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 124 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதில் பாஜக 73, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 111 இடங் கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 76, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.

மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் 5, பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை கைப்பற்றியது.

பாஜக – ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது