ஓவியாவை தூங்க விடாம உக்காந்து கோரஸ் பாடுறது எல்லாம் வரம்பு மீறல்!
“நான் நல்லாத்தான் நடந்துக்கிறேன், ஆனா டிவில எப்படி காட்டுறாங்கன்னு தெரியல”ன்னு பிக்பாஸ்கிட்டயே காயத்ரி சொல்றார். அதாவது, தன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வெளியே இருக்காது, தன்னோட பிஹேவியர் அப்படின்னு நல்லா தெரிஞ்சிருக்கு. இருந்தாலும் அதை நியாயப்படுத்துறாங்களாம்.
முதல் வாரத்துலயே, “வெளில வரட்டும் பாத்துக்கிறேன்”னு மிரட்டல் விட்டதுக்கு கமல் கண்டிச்சார். இப்போ இந்த வாரம் ரெண்டு தடவை அப்படி மிரட்டியாச்சு. நீங்க என்ன நியாய டேஷ புடுங்குனாலும் ஒருத்தர இப்படி மிரட்டுறது எல்லாம் என்ன கேட்டகிரில வருதுங்க மேடம்?
அவர், “கேமராவ ஆஃப் பண்ணுங்க, அப்புறம் பாருங்க, எப்படியும் வெளில எங்கிட்ட மாட்டாமயா போய்டுவ”னு சொல்றதெல்லாம் பகிரங்க மிரட்டல். அப்பட்டமான கிரிமினல் குற்றம்.. இத நீங்க வெளில சொல்லி இருந்தீங்கன்னா போலீஸ்லயே கம்ப்ளைன் பண்ணலாம். இதுக்காகவே கமல் உங்களை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய அனுப்பனும்.
ஓவியாவ எல்லாரும் பேச்சுவார்த்தைக்கு கூப்டுறீங்களே… ஆனா உங்களால பேச்சுவார்த்தை நடத்த முடியுதா? ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள காயத்ரிக்கு அப்படியென்ன கோபம் வருது? அது ஓவியா உங்க பேச்ச கேக்கலைன்னுதானே….? எல்லாரும் காயத்ரி தலைல தூக்கி வெச்சிருக்கிற கிரீடத்த ஓவியா கண்டுக்கிறதே இல்லைங்கிற கடுப்புதானே…? அந்த பேச்சுவார்த்தைய பாக்கிற எல்லோருக்கும் புரியும், சீண்டுறது யாரு, அமைதியா ஒதுங்கி போறது யாருன்னு…
“மூஞ்சியும் மொகரக்கட்டையும்”னு காயத்ரி சொல்றத கேட்டுக்கிட்டு, பொறுமையா உக்காந்து பேசனுமாம்…! ஏன்யா இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல…? என்னதான் உங்களுக்கு ஓவியா மேல கடுப்பு இருந்தாலும் காயத்ரி இப்படி வரம்பு மீறி பேசுறத எவனாவது கண்டிக்கிறீங்களா….? இவ்வளவுக்கும் நடுவுல கணேஷ் தனிப்பட்ட முறைல ரொம்ப பொறுமையா ஓவியாகிட்ட பேச்சுவார்த்தை நடத்தினது சிறப்பு. அந்த மாதிரி ஒரு தடவையாவது காயத்ரி & கோ உக்கார்ந்து பேசி இருந்தாங்கன்னா பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும். ஆனா அவங்க நோக்கம், பிரச்சனைய தீர்க்கிறது இல்லையே.
ஃபேமிலி ட்ராமா போட்டப்ப எல்லா வீட்டு வேலையையும் சினேகன்தான் பண்ணனும்னு பிக்பாஸ் சொல்லி, அதை தனியா கிளாரிஃபை வேற பண்ணாங்க. அதுக்கப்புறமும் ஓவியாவ கிளீனிங் வேலை சொன்னாரு சக்தி… அதுவும் இல்லாம, அடுத்த நாள் ஓவியா “க்ளீனிங் பண்ண முடியாது”ன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லி தலைவர் பதவில இருந்து தூக்கிட்டு காயத்ரிய தலைவராக்குறாராம். அப்போ வரை அது சக்தியையும் காயத்ரியையும் தவிர வேற யாருக்கும் தெரியல. ஓவியா அந்த பக்கமா கிராஸ் பண்ணி போனதால ஓவியாவுக்கு அது தெரிஞ்சிருக்கணுமாம்… டேய் எந்த ஊரு நியாயம்டா இது…? நம்ம நாட்டாம பஞ்சாயத்துலகூட பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன் வராம தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்கடா..
“இப்போ டாய்லெட் க்ளீனாதான் இருக்கு, அதனால மறுபடி க்ளீன் பண்ண வேணாம்”னு ரைசாகிட்ட ஓவியா சொன்னத, “டாய்லெட் க்ளீன் பண்ண மாட்டேன்னு சொல்லிடுச்சு”ன்னு ரைசா காயத்ரிகிட்ட சொல்லிடுது. அத வெச்சிக்கிட்டு எல்லாரும் சாமியாடுறாங்க. கணேஷ் வந்து கேக்கும்போதும் ஓவியா தெளிவா சொல்றார், “டாய்லெட் கிளீன் பண்றது பிரச்சனை இல்லை, ஆனா டெய்லி பண்ணனும்னு அவசியம் இல்லை, 2-3 நாளைக்கு ஒரு தடவ பண்ணா போதும். அதுதவிர எல்லாருக்கும் பர்சனல் ஹைஜீன் முக்கியம். டாய்லெட்ட க்ளீனா யூஸ் பண்ணனும்”னு சொல்றார். ஆனா, காயத்ரியோ ரைசா சொன்னத கேட்டுக்கிட்டு “அது எப்படி ஓவியா டாய்லெட்ட க்ளீன் பண்ண மாட்டேன்னு சொல்லலாம்”னு கொந்தளிக்கிறார். “உன் ஷிட்ட நான் ஏன் க்ளீன் பண்ணனும்”னு பத்து தடவையாவது இந்த காயத்ரி கேட்டிருக்கும். என்னய்யா இது? அப்போ ஒவ்வொருத்தரு ஷிட்டா, இது யாரு ஷிட்டுன்னு பாத்துதான் க்ளீன் பண்ணுவீங்களா?
ஜூலி காயத்ரிகிட்ட பேசுறத பாக்கும்போது, ஜூலிய பத்தி பேசுறதே யூஸ்லெஸ்னு தோணுது… காயத்ரி சும்மா இருக்காம எல்லார்கிட்டயும் போய் “ஓவியாவ புறக்கணிக்கணும்”னு வற்புறுத்துது. நமீதாவோ திரும்பத் திரும்ப “இப்பவே ஓவியாவுக்கு சாப்பாட கட் பண்ணனும், டாய்லெட் யூஸ் பண்ணவிடக் கூடாது”ன்னு சொல்லுது. சக்தி தான் தலைவருன்றதால(?) “இன்னும் ஒருநாள் வெயிட் பண்ணுங்க, கமல் சார மீட் பண்ணும்போது எல்லாம் சேர்ந்து இத சொல்லிடலாம்”னு சொல்றாரு.
ஆண்கள்லாம் காயத்ரி & கோ கிட்ட பேசும போது, எல்லாரும் ஒத்துமையா, “கமல்சார்கிட்ட பேசும்போது இத பத்தி சொல்லுவோம்”னு சொல்றாங்க. ஆனா தனியா பேசும்போது வையாபுரி, ஆரவ், “ஓவியாவ புறக்கணிக்கிறது தப்பு”ன்னு சொல்றாங்க. இவ்ளோ நேரம் காயத்ரிக்கு ஜிங்ஜக் அடிச்ச சினேகனும் “ஆமா, இதெல்லாம் தப்பு”ன்னு சொல்றார். கணேசுக்கும் ஓவியாவ புறக்கணிக்கிறது சரியா படல. “சாப்பாடு, டாய்லெட் கட் பண்றதெல்லாம் ரொம்ப தப்பு, பொண்ணுங்க ஓவரா போறாங்க”ன்னு ஆண்கள் எல்லாரும் பீல் பண்றாங்க.
ஆனா இதுல பெரிய காமெடி, வையாபுரி, ஆரவ், சினேகன் இத பத்தி பேசும்போது “ஆமா, ஆமா, இதெல்லாம் ரொம்ப தப்பு”ன்னு சக்தி அடிச்சாரு பாருங்க ஒரு அந்தர் பல்டி…. ஏம்பா கேமராவும் மைக்கும் இருக்கும்போதே இப்படியெல்லாம் பண்றீங்களே… அப்போ எதுவும் இல்லேன்னா எப்படித்தான் இருப்பீங்க?
தனியா இருக்கும்போது சினேகன், ஓவியாகிட்ட “நாங்கள்லாம் உன் சப்போர்ட்டுக்கு இருக்கோம்”னு சொல்றாரு… அதுக்கு, “நீங்க யாருமே இல்லைன்னாலும் என் சப்போர்ட்டுக்கு நான் இருக்கேன்”னு அடிச்சுது பாருங்க ஓவியா…. தலைவிடா…
நைட்டு தூங்குற நேரத்துலகூட ஓவியாவ வெச்சிக்கிட்டே எப்படியெல்லாம் பேசுதுங்க… அப்புறம் தூங்கவிடாம பாட்டுப் பாடி கடுப்பேத்துறாங்க.. அதுலயும் காயத்ரி டைமிங்கா வேற பாட்டு செலக்ட் பண்ணிப் பாடி திறமைய காட்டுது… இப்படி தூங்குற நேரத்துல உக்காந்து கோரஸ் பாடுறதெல்லாம் வரம்பு மீறல். ஓவியா கிராஸ் பண்ணி போறப்ப எல்லாம் காயத்ரி ஜாடைமாடையா குத்தி பேசுது..
இப்படி எல்லா சீண்டல்களையும் தாங்களே பண்ணிட்டு கேமரா முன்னாடி வந்து நின்னு, பிக்பாஸ் கிட்ட “ஓவியா எல்லா பொண்ணுகளையும் ட்ரிக்கர் பண்ணுது”ன்னு கம்ப்ளைண்ட் பண்றானுங்க….
இந்தத் தடவ கமலுக்கு நிறைய வேலை இருக்கு…. ஆனா அவர் திடீர்னு அரசியல்ல பிசியாகிட்டார்.. பார்ப்போம், நியாயமா ஏதாவது பண்றாரா? இல்ல கால்சியம் சாக்லேட்ட முழுங்குன மாதிரி முழுங்குறாரான்னு…!
MARAM R