தமிழ் திரையுலகின் நிழல் அதிகார பொய்மையின் வெளிச்சமே “பிக் பாஸ்’!
ஒரு வகையில் தமிழ் திரையுலகின் நிழல் அதிகார பொய்மையின் வெளிச்சமே பிக் பாஸ்…
சினேகன், காயத்ரி, சக்தி, நமிதா, ஆர்த்தி, கணேஷ், ஓவியா, பரணி, ஸ்ரீ, கஞ்சா கருப்பு, ஆரவ், வையாபுரி, அனுயா, பிந்து மாதவி, சுஜா வருணி, ரைஸா…
சினேகன், காயத்ரி, சக்தி, நமிதா, ஆர்த்தி, கஞ்சா கருப்பு, வையாபுரி பல திரைப்படங்களில் பங்கேற்றுள்ளதால் ஓர் அதிகார மற்றும் ஆதிக்க திமிர்வாதிகள். (சக்தி, காயத்ரி ஒரு படி மேலே. பெற்றோர் சாதித்ததை இரவல் பெற்று அதன்மூலம் ஆதிக்கம் செலுத்துபவர்கள்.)
ஓவியா, கணேஷ், பரணி, ஸ்ரீ, ஆரவ், பிந்து மாதவி, ரைஸா, அனுயா, சுஜா போன்றோர் எந்த பின்புலனும் இல்லாமல், தங்கள் திறமையால் முன்னேற நினைத்து போராடிக் கொண்டிருப்பவர்கள்.
இதில் ஆரவ் போன்றவர்கள் அதிகார மற்றும் ஆதிக்கவாதிகளுக்கு ஜால்ரா அடித்தாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைப்பவர்கள். அதற்காக எந்த யுக்தியையும் அவர்களுக்காக கையாளுபவர்கள். (ஓவியாவை காதலிப்பது போல் ஏமாற்றி மிதித்தது போல்.)
கணேஷ் போன்றவர்கள், எதையும் சகித்துக்கொண்டு, தன் வேலை உண்டு என்று தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்பவர்கள்.
பரணி போன்றவர்கள் ஆதிக்க அதிகாரவாதிகளை எதிர்க்க முடியாமல், தனக்கான இடத்திலேயே தன் நிலையை தக்கவைத்துக் கொள்ள நினைப்பவர்கள்.
ஸ்ரீ, அனுயா, பிந்து, ரைஸா போன்றவர்கள் வாழ்கையில் வெற்றி என்ற எண்ணம் உள்ளிருந்தாலும், அதை அடைய கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து காத்திருக்கும் பட்டியலில் வாழ்பவர்கள். இவர்கள் காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஓவியா போன்றவர்கள் மக்களை ஈர்க்கும் திறமையிருந்தும், எந்த பின்புலனும் இல்லாததால், அதிகார ஆதிக்கவாதிகளின் செயல்களை ஏற்க மனமில்லாமல், சுயம் என்கிற ஒரு போராட்டத்தைப் போராடி, அதனால் ஏற்படும் மன உளச்சலால் பாதிப்புள்ளாகிறவர்கள். ஆனால் அந்த மன உளச்சலில், அதே சுயம் என்கிற மருந்தால் மீண்டு வந்து அதே போராட்டத்தை போராடி வெல்பவர்கள். மக்களின் மனதில் என்றும் நிலைப்பவர்கள் இவர்களே. (ரஜினி சார், அஜித், விஐய் சேதுபதி.)
இந்த குணாதிசயவாதிகளே இன்றைய தமிழ் திரையுலகம்…
இதில் படைப்பாளிகளில் பலர், “ஜூலி”யை போன்றவர்கள். வாய்ப்புகளுக்காக சுயம் இழந்து, ஆதிக்க அதிகாரவர்க்கங்களுக்கு மசாஜ் செய்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்பவர்கள்.
சிலர் கமல் சாரை போன்றவர்கள். யாரையும் சாராமல், நடு முள்ளாக இருந்து, வெற்றியோ தோல்வியோ, பாராட்டோ கேலியோ… உறுதியாக இருந்து தன் எண்ணங்களை படைப்புகளாக தன் திறமையால் முத்திரை பதிப்பவர்கள்…
இதில் ஓவியா வகையறாக்களும், கமல் சார் வகையறாக்களும் ஒன்று சேரும்போது மட்டுமே தனித்துவமான மக்கள் போற்றும் படைப்புகள் உருவாகின்றது. ஆனால் அது நூறில் ஒன்று மட்டுமே…!! அது நூறில் ஐம்பதாவது தொட்டால் மட்டுமே “கலை” பிழைத்திருக்கிறது என்று பொருள்…
MICHAEL ARUN