சாதி என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாம் காயத்ரி!

பிக்பாஸ்: 20.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்…

# # # # #

MICHAEL ARUN:

பிக்பாஸ் சீசன் 1 முடிந்து, திங்கள் முதல் சீசன்.2 ஆரம்பமாகிறது. ஆனால் மக்கள், சீசன் 1 போல் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறியே…

கமல் சார் சீசன்.2-ல் சிறந்த ஹோஸ்ட்டாக மாறலாம். ஏனென்றால் தன்னை சார்ந்தவர்கள் இனி இல்லையென்பதால்…!

காயத்ரியே புறம் என்பதை ஷேரிங் என்று மடை மாற்றும்பொழுது, கமல் சார் நெப்போட்டிஸத்தை,   “நான் சாதியாளனா”  என்ற கேள்விக்குள் மறைப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை… புத்திசாலிகள்…!

கமல் சாரின் சுமாரான கேள்வியையே உதாசீனபடுத்திய காயத்ரிக்கு, மக்கள் கேள்விகள் எல்லாம் “ஹேர்” என்பது போல் தான் என்பதை நன்கு அறிந்த கமல் சாரும், பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களும், மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடிரென்று கேள்வி கேட்க வைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை, அதுவும் பதிவு செய்யப்பட்டு எடிட் செய்து ஒளிப்பரப்படுவதில்…

ஒரு டாஸ்க்கில் ஓவியா பயன்படுத்திய, “இவங்களா அண்ணி, பன்னி மாதிரி இருக்கா” என்கிற ஒரு வார்த்தைக்கு தானாக முன்வந்து கேள்வி எழுப்பிய கமல் சார் தான், கடைசி வரை தன் நண்பரின் மகள் “சேரி பிஹேவியரில், எச்சையில்” ஆரம்பித்துப் பேசிய அனைத்தையும் மறைத்து, சம்பிரதாயமாக “ஹேர்” என்பதை மட்டும் பிரதானப்படுத்தி மக்களை மழுப்பி பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்…

கமல் சார் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அவர் ஆடிய நடனம் பார்க்க, ரசிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு அல்ல…

எப்படியிருந்தாலும் “You regret one day” என்பது நேற்று ஒருவருக்கு சற்றாவது புரிய ஆரம்பித்திருக்கும். இல்லை, அதுவும் “ஹேர்” போல் என்று நினைத்து கடந்து செல்லலாம்… பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு இனி அவர் வாழ்வியல்… அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனால் இந்த தாக்கம், மக்களின் கோபம், அவரது பொதுவாழ்வில் சில காலங்களுக்கு தொடரும் என்பது நிதர்சனம்…

# # # # #

JAYASHREE GOVINDARAJAN:

என்ன கேள்வி கேட்டாலும் எதுவுமே பாதிக்காத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு எதுவும் தவறாகிவிடவில்லை என்று அடித்துப் பேசுபவர்களிடம் கேள்வி எதுவும் கேட்காமல் விடுவதே சரி.

காயத்ரி வீட்டுக்குப்போய், தானே சமூகத் தளங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடவேண்டும்.

#

ஓவியாவைத்தான் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதே காயத்ரிக்கு இப்பொழுதுதான் தெரிகிறதா? எவ்வளவு பிடித்திருக்கிறது என்று இனி வீட்டுக்குப் போய்த் தெரியும்போது கிடைக்கிற மின்சாரத்தில் ஒருமாத தமிழ்நாட்டுத் தேவையைத் தீர்த்துக்கொள்ளலாம்.

#

ஏன் ‘ஹேர்’ வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? ‘எச்ச’ மற்றும் கமலையே சட்டத்தின்முன் நிற்கவைத்த ‘சேரி பிஹேவியர்’ எல்லாம் ஏன் யாரும் குறிப்பிட்டுக் கேட்பதேயில்லை? ‘ஹேர்’ கோபத்தில் வரும் வார்த்தை. மற்றவை அதைவிட மோசமான ரகம்.

#

ஓவியாவை மட்டும் (அழ)விட்டுவிட்டு, அத்தனை திருஷ்டிப் பரிகாரங்களையும் நிற்க வைத்து காயத்ரி திருஷ்டி சுற்றிப் போட்டதெல்லாம் ஏனோ யாருக்கும் நினைவுக்கே வருவதில்லை.

# # # # #

SENTHIL R:

வெளியேறிய காயத்ரி கமலை சந்தித்தபோது, கமல் சில விமர்சகர்கள் மீதான தனது நீண்ட நாள் கோபத்தை கூர்மையாக வெளிப்படுத்தினார். “நாம் இருவரும் (கமலும் காயத்ரியும்) ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் நான் உங்களிடம் (காயத்ரியிடம்) கனிவு காட்டினேன் என்கிறார்கள். உண்மையில், இதுதான் கெட்ட வார்த்தை. அப்படி சொல்லாதீர்கள். நான் (சாதி கடந்து) ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எதில் வேண்டுமானாலும் கிண்டல் செய்யுங்கள். சாதிதான் ஆபத்தான கெட்ட வார்த்தை” என்றார்.

கமல் இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது, சாதி என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிபோல் காயத்ரி ஆக்ட் கொடுத்தது தான் ஹைலைட். ஏதோ பார்ப்பன வருணத்தவர் எல்லோரும் சாதியற்றவர்கள் போலவும், சூத்திர – பஞ்சம வருணத்தவர்கள் மட்டுமே சாதியைப் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது போலவும் இங்கே சில ஆரியத்துவவாதிகள் சீன் போடுகிறார்களே… அதை அப்படியே பிரதிபலித்தார் காயத்ரி.

ரொம்ப அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு, “சாதின்னா…?” என்று கேட்டார் காயத்ரி. “உங்களுக்கு புரியவில்லையா?” என்று கமல் கேட்க, ‘ஆம்’ என்று தலையசைத்தார். “புரியாமலே இருக்கட்டும்” என்று காயத்ரியின் போலித்தனத்தை அங்கீகரித்தார் கமல்.

ம்… நடத்துங்க…!

# # # # #