“நமக்கு யார் வேண்டும் – பாரதியா? அல்லது இல.கணேசனா?”
இல.கணேசன், “நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார். இது எங்கையோ ஒரு பாக்கியராஜ் படத்திலே கேட்ட வசனம் மாதிரி இருக்குது.
அது போகட்டும். இல.கணேசன் எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
பகவத் கீதையில் அர்ஜுனனின் ஐயத்தை போக்கும் விதத்தில் கண்ணன் அவனுடைய கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில் ஒன்று – “ஒரு குடும்பத்திற்காக ஒரு பிள்ளையை பலி கொடுக்கலாம். ஒரு ஊருக்காக ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம். ஒரு நாட்டிற்காக ஒரு ஊரையே பலி கொடுக்கலாம்.”
ஆகையால், அர்ஜுனன் நாட்டிற்காக தன் உற்றார் உறவினரை அழிப்பது நியாயமான செயல் என்பது கண்ணனின் கூற்று.
இதற்கு மாறாக பாரதி சொன்ன கருத்து ஒன்று உண்டு. “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்து விடுவோம்” என்று சொன்னான் அந்த மகா கவி.
இதில் குடும்பம் என்ன, ஊரென்ன, நாடென்ன, இந்த புவியே என்ன – ஒருவன் பசியால் வாடும்போது என்பது அந்த நவீன மனிதனின் கூற்று.
நமக்கு யார் வேண்டும் – பாரதியா அல்லது இல.கணேசனா?
பாரதி என்றால், அதற்கு பிறகு நாடென்று ஒன்று இருக்குமா என்று கணேசன் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
VENKATESH CHAKRAVARTHY