’பாய் – ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பேசும் படமா?

‘பாய் – ஸ்லீப்பர் செல்’ திரைப்படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

“மூன்று இடங்களில் பாம் பிளாஸ்ட் உறுதி” என்ற வசனத்தைக் கொண்டு சர்ச் மற்றும் கோவில் விஷுவலுடன் டிரைலர் ஆரம்பம் ஆகிறது.

“எங்க பாய் சொல்வார், மதம் ஒரு அரசியல் கருவின்னு” என்ற வசனம் வரும்போது, மூன்று மதங்களின் பெயர்கள் பேப்பர்களில் எழுதப்பட்டிருப்பது.

”நான் மதம் மாறணுமா?” என்ற வசனம்.

 இஸ்லாமியப் பெண் ஒருவர் தொழும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருப்பது.

 பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதமாற்றம்

 -போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் டிரைலர் சுவாரஸ்யமாக இருக்க…

இறுதியில், மாருதி காரில் குண்டு வெடிப்பு, அதில் 1998- ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை சம்பந்தப்படுத்தி பேசியிருக்கும் வசனம் ஆகியவை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மாருதி கார் குண்டு வெடிப்பு சமீபத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பையும் நினைவூட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஒட்டு மொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்ட 1998 கோவை குண்டு வெடிப்பு… இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்து உருவாக்கியிருக்கும் படமா இந்த ‘பாய்’ திரைப்படம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘தி கேரளா ஸ்டோரீஸ்’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களின் வரிசையில் இந்த ‘பாய் – ஸ்லீப்பர் செல்’ திரைப்படமும் இருக்கும் என்ற பரவலான பேச்சும் மக்களிடையே வலம் வருகிறது.

இத்தனை சர்ச்சைக் கேள்விகள் இருந்தாலும், ‘பாய் – ஸ்லீப்பர் செல்’ படத்தின் டிரைலர் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

இந்த ‘பாய் – ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.