“ஆண் பெண் உறவை பேசும் படம் ’பேச்சிலர்”: நாயகன் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

GV பிரகாஷ் குமார், திவ்யபாரதி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், முனீஷ்காந்த், பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பேச்சிலர்’. இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பெற்றுள்ளார்.

உலகமெங்கும் திரைவெளியீடாக  2021 டிசம்பர் 3  ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிகை ஊடக சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

0a1c

இந்நிகழ்வில் படக்குழுவினர் பேசிய பேச்சு விவரம்:

பாடலாசிரியர் தமிழணங்கு:

பேச்சிலர் படத்தில் வேலை செய்தது மிக அழகான அனுபவம். பாடல்கள் எல்லாம் அழகாக வந்திருக்கிறது. சித்துகுமார் இசையில் இயக்குநர் என் கூட இருந்து படத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கினார். ஜீவி மற்றும் படக்குழு அனைவருக்கும் நன்றி

நடன அமைப்பாளர் அசார்:

நான் அதிகம் மேடை ஏறியதில்லை. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. பேச்சிலர் நடன அமைப்பு வழக்கமானது அல்ல, மிக சவாலானதாக இருந்தது. நிறைய பேர் இதை மலையாளம் மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் இது தமிழக நடன அமைப்பில் தான் இருக்கும். இயக்குநர் சதீஷ் இது தான் வேண்டும் என்று கேட்க, அதன் படி உருவாக்கினோம். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்  மிக அற்புதமாக உழைத்துள்ளார். எங்கள் படத்தில் கிரேன் எல்லாம் பயன்படுத்தவில்லை முழுக்க பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தே தான் படமாக்கினார். நான் ஒரு அறிமுக நடன இயக்குநர் என்றாலும் ஜீவி மிக எளிமையாக பழகி, ரிகர்சல் எல்லாம் செய்து அருமையாக செய்துள்ளார். படமும் அழகாக வந்திருக்கிறது நன்றி.

ப்ராங்ஸ்டர் ராகுல்:

இந்தப்படத்துல நான் ஒன்ணும் பெருசா பண்ணலங்க, ஒரு நாள் தான் ஷீட். ஒரு மெடிக்கல் ஷாப் காட்சி, ஆனா அதை எடுக்கும்போது நிறைய பயந்தேன் அதிலும் டப்பிங் எல்லாம் இயக்குநர் என்னை பயமுறுத்திவிட்டார். அந்த ஒரு காட்சியை பார்த்துவிட்டே எல்லோரும் நன்றாக இருக்கிறது என என்னைப் பாராட்டினார்கள். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சித்துகுமார்:

முதலில் இப்படத்திற்காக சந்தித்தபோது படத்தில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது, அதன் பிறகு ஒரு 6 மாதம் கழித்து மீண்டும் என்னை தேடி இந்த வாய்ப்பு வந்தது. ஜீவி சார் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் தான் என் முதல் படம், ஜீவி இசை எனக்கு பிடிக்கும் அவருக்கு இசையமைக்க பயம் இருந்தது. அவருக்காக இசையில் சில விசயங்கள் செய்தேன். வெகு குறுகிய காலத்தில் இசையமைக்க வேண்டியிருந்தது ஆனால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளோம். இயக்குநருக்கு முதல் படம் மாதிரியே இல்லை நன்றாக செய்திருக்கிறார் உங்களுக்கு படம் பிடிக்கும் நன்றி.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ்:

என்னோட கேரியரில் ராட்சசனுக்கு பிறகு, என் வாழக்கையில் மிக முக்கியமான படம். ஜீவி கூட என்னோட இரண்டாவது படம், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தம்பியாக வந்திருப்பார் இதில் டோட்டலாக வேறு டோனில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இயக்குநரும்  நானும் 11 வருடமாக இந்தக்கதையை பேசியுள்ளோம்,  அது படத்தில் வந்திருக்கிறது. எங்களுக்கு முழு திருப்தியை தந்துள்ளது. உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார்:

3 வருடத்துக்கு முன்னாடி டில்லிபாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் செய்யலாம் என்றார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. நாம் நினைத்ததை திரையில் கொண்டுவருவது கஷ்டம், தயாரிப்பாளர் எப்போதும் வேறெதாவது எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம், தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால் எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து,  இப்படைப்பை உருவாக்கியுள்ளார் அவருக்கு நன்றி. தேனி ஈஸ்வர் சார், படத்தில் பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தே தான் படமாக்கி தந்தார். நாங்கள் கேட்டதை விடவும் சிறப்பாக செய்துள்ளார். ஒரு காட்சி ஒகே டேக்கே 40 டேக் போகும், அதை அவ்வளவு பொறுமையாக பார்த்து, கிரியேட்டிவாக எடிட் செய்துள்ளார் ஷான். அவருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. ஒரு நண்பனாக அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஜீவி சார்,  ஒரு ஆக்டராக அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கிறது, அது இயக்குநருக்கு வரம்,  இந்த மாதிரி படத்தில் அவர் முகத்தில் காட்டும் சின்னச் சின்ன உணர்வும் படத்திற்கு அவ்வளவு பலமாக இருக்கும். படம் இத்தனை இயல்பாக இருக்க அவர் தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள் அனைவருக்கும் நன்றி. திவ்யா 3 மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்தார். இந்தப்படம் அவர் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும். ஒரு அறிமுக நடிகையாக அற்புதமாக நடித்திருக்கிறார். சித்துவை தான் அதிகமாக டார்ச்சர் செய்திருக்கிறேன் அதையெல்லாம் பொறுத்துகொண்டு சிறப்பான பின்னணி இசை தந்திருக்கிறார். அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்து, அழகாக உருவாக்கியுள்ளோம்,  உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி

Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன்:

இந்தப்படத்தை  நான் பார்த்து விட்டேன். சாதாரண ரசிகனாக சொல்கிறேன் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். படம் பார்த்து மறுநாளும் மனதிற்குள் இந்தப்படம் ஓடிக்கொண்டே இருந்தது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் டில்லிபாபு இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம் என்றார். டப்பிங் மட்டுமே 800 மணி நேரத்திற்கும் மேலாக செய்திருக்கிறார். இவரைப்போல் சமீபத்தில் திரைத்துறை மீது காதல் கொண்ட எவரையும் பார்த்தில்லை. தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய கலைஞனாக இப்படத்தின் மூலம் வந்திருக்கிறார் இயக்குநர் சதீஷ். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் போல் இப்படம் இருக்கும். ஜீவி சாரோட கேரியர் பெஸ்டாக இப்படம் இருக்கும். இளைஞர்களுக்கான படமே இங்கு இல்லை அதை போக்கும் விதமாக இப்படம் இருக்கும். எல்லோரும் அனுபவித்து ரசித்து பார்க்கும் படைப்பாக இப்படம் இருக்கும்,  பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு :

படத்தில் வேலை செய்த 300 பேரிடமும் சதீஷ் சண்டை போட்டுள்ளார். அவர் சண்டை போடாதது என்னிடம் மட்டும் தான். 800 மணி நேரம் டப்பிங் செய்தது இது தான் முதல் முறை. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். சதீஷ் உடன் வேலை பார்க்க முடியாது என ஓடியவர்கள் நிறைய பேர். நான்கு படத்திற்கான உழைப்பை இந்தப்படத்திற்கு தந்திருக்கிறது படக்குழு. போஸ்ட் புரடக்சன் மட்டுமே 2 வருடம் ஆகியிருக்கிறது. அனைவருமே அவர்களின் பெஸ்ட்டை தந்துள்ளார்கள். படத்தை பார்த்த அனைவருமே படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். எனக்கு ராட்சசனுக்கு பிறகு பெரிய படமாக இது இருக்கும். ஜீவி தந்த உழைப்பு பிரமிப்பானது இரவு பகலாக உழைத்திருக்கிறார். அவர் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். திவ்யபாரதி அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். ஜீவிக்கும் அவருக்கும் நடிப்பில் போட்டியிருக்கும். நான் எடுத்துள்ள 6 படத்தில் 5 பேர் அறிமுக இயக்குநர்கள் தான், ராட்சசன் இயக்குனருக்கு மட்டுமே இரண்டாவது படம். நான் அடுத்து எடுக்கும் 6 படமும் புதிய இயக்குநர்கள் தான். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதை பெருமையாக கருதுகிறேன்.  சிறந்த திரைக்கதைகள் செய்தால் அதற்கான பாதை இங்கு இருக்கிறது. 2 வருஷம் இயக்குநர்  சதீஷ் கேட்ட அனைத்தையும் தந்திருக்கிறேன். இயக்குநருக்கான சுதந்திரத்தை தர வேண்டும் என்று நினைப்பவன் நான். நான் கண்டுபிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் சதீஷ். எல்ல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் தியேட்டரில் படம் பாருங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகை திவ்யபாரதி:

2 வருடமாக இந்த தருணத்திற்காகத்தான் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம் ஆனால்  என்னை நம்பி நடிக்க வைத்ததற்கு நன்றி. முதலில் ஷூட் செய்ய்யும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதுவிட்டேன் இயக்குநர் சதீஷ் தான் ஆறுதல் தந்து நடிக்க வைத்தார். ஜீவி சார் மிக இயல்பாக இருந்து, எனக்கு  டயலாக் எல்லாம் சொல்லி தந்தார். என் அம்மா சிங்கிள் பேரண்ட் எப்பவும் என் கூடவே இருந்தார். எல்லோரும் படம் பாருங்கள் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் GV பிரகாஷ் குமார்:

இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன். டில்லிபாபு சார் உடன் மேலும் 3 படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார். முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது அது திவ்யபாரதிக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நடிக்கும்போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். ஈஸ்வர் சார் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறார்.  ஷான் லோகேஷின் எடிட்டிங்கிற்கு ரசிகன் நான். நான் தப்பிச்சிட்டேன் சித்துகுமார் மாட்டிக்கொண்டார். ஆனால் பராவாயில்லை அருமையான மியூசிக் தந்திருக்கிறார். இந்தப்படத்தில் கோவையின் உண்மையான சிலாங்கை கொண்டு வந்திருக்கிறோம் அனைவருககும் பிடிக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

தொழில்நுட்பக்குழு

இப்படத்தில் GV  பிரகாஷ்குமார் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். திபு நினன் தாமஸ், காஷ்யப் மற்றும் சிகப்பு மஞ்சள் பச்சை படப்புகழ் சித்து தலா ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளனர், மேலும் படத்தின் பின்னணி இசையை  சித்து செய்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளராக ஷான் லோகேஷ், கலை இயக்குநராக M.லட்சுமி தேவா, ஸ்டண்ட் இயக்கத்தில் PC பணியாற்ற, நடன இயக்குனராக அசார், K. பூரணேஷ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), SS.ஸ்ரீதர் (தயாரிப்பாளர் நிர்வாகி), விக்னேஷ் தங்கராஜூ (இணை இயக்குநர்), Sync Cinema  (ஒலி வடிவமைப்பு), சுபையர் (உடை வடிவமைப்பு), Prism & Pixels VFX Studio (DI), கிரண் R (VFX), மணி தாமோதரன் (தயாரிப்பு மேலாளர்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), இ.ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) பணிகளை செய்துள்ளனர்.