தேவர் குருபூஜை நாள் சிந்தனை: “பிரமலை கள்ளர் பெருமை (?)”
இன்றைய நாள் கருதி ஒரு மீள்.
இந்த பிரமலை கள்ளர் கூட்டம் இன்னும் பேரனுபவங்களை எனக்கு தந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை பிறிதொரு தருணத்தில் எழுதுகிறேன்.
# # #
“பிரமலை கள்ளர் பெருமை (?)”
பிரமலை கள்ளர் சாதிக்கென பல பெருமைகள் உண்டு. அவற்றில் முக்கியமான பெருமையாக, இந்த நொடி வரை அந்தச் சாதியில் பிறந்தமைக்காக என்னை அருவருப்படையச் செய்து, அந்த பெருமைகளிலிருந்து என்னை தள்ளியே நிற்க வைத்ததைதான் சொல்வேன்.
அப்பா காலத்திலிருந்தே சொந்தங்களின், ஊர்மக்களின் வெட்டி வீம்பையும் காட்டுமிராண்டித்தனத்தையும் கண்டும் கேட்டும் வந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் எதிர்த்து ‘தேவர் மகன்’ கமல் மாதிரி அப்பாவும் போராடித்தான் பார்த்தார். ஆனால் அவரிடமும் மேற்சொன்ன பெருமையை, இந்தச் சாதி காட்டி விரட்டி விட்டது.
அதில் சோகம் என்ன தெரியுமா? இந்த கும்பலில் பெரும்பான்மை, ‘தேவர்மகன்’ படத்தில் கமல் தங்களின் காட்டுமிராண்டித்தனத்தைத் தான் விமர்சித்திருக்கிறார் என்கிற உண்மைகூட புரியாமல், “போற்றிப் பாடடி பொண்ணே” போதையிலேயே படத்தை வெற்றி பெறச் செய்யுமளவுக்கு அறிவுமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்!
இவர்களின் முக்கியமான பண்புகள் எவை?
- சாராயம்
- பணம்
- அறிவீனம்
- வெட்டி வீராப்பு
- மானமின்மை
- காட்டுமிராண்டித்தனம்
- சாராயம்: இந்த வஸ்துவை இவர்கள் நடத்தும் எல்லா விசேஷங்களிலும் காணலாம். தொடர்ந்து ஒரு ஆக்ஷன் பிளாக் கண்டிப்பாக இருக்கும். Godfather series படங்களில் வருவது போல், ஒரே விழாக்கள்தான், சண்டைகள்தான். Coppola கள்ளரா என்று தெரியவில்லை. விசேஷங்களின் வகைகள் என்னவென்றால் மஞ்சள் நீராட்டு விழா, காதுகுத்து, கவரடப்பு, கல்யாணம், கருமாதி. இவற்றுக்கான எந்தக் காரணமும் வரலாறும் அவர்களுக்கு தேவையில்லை. மொய் வரவேண்டும். அவ்வளவுதான். அதிலும், “மஞ்சள் நீராட்டு விழாவெல்லாம் முன்னாடி ஓ.கேடா. இப்ப அசிங்கம்டா” என்று சொல்லிப் பாருங்களேன். உங்களுக்கெல்லாம் அறிவு என்று ஏதேனும் இருக்கிறதா என்பது போல் பார்த்துவிட்டு நக்கலாக சிரிப்பார்கள்.
- பணம்: கள்ளர்கள் அந்த காலத்தில் களவாடியவர்களா என்று தெரியாது. ஆனால் இப்போது கேட்டால் கண்டிப்பாக ஆம் என்றுதான் சொல்வேன். பணம் என்று எழுதி வைத்துப் பாருங்களேன். எழுத்து அழியும்வரை நக்குவார்கள். எனக்கு தெரிந்த ஒரு நபர் குடும்பச்சொத்தை அடைய தந்தையின் பெயரில் பொய் உயில் எழுதியவர். கொஞ்ச நஞ்ச குற்றவுணர்ச்சிக்கூட இல்லாமல் தெருவில் பெருமை பீத்திக்கொண்டு இன்றும் அலைவார். இவரது குடும்பத்தாருக்கு இவர்தான் ராஜராஜ சோழனாம். அதே நபரின் சமீபத்திய சாதனை என்ன தெரியுமா? கடைசி காலத்தில் பணம் கொடுக்கவில்லை என தன் குடும்பத்தோடு, பெற்ற தாயை அடித்து தங்கை வீட்டுக்கு விரட்டியவர், அதே தாய் மரணிக்க சில தினங்கள் இருக்கும்போது தன் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். ஏன் தெரியுமா?
Choose the best answer.
a. அன்பு b. அளவு கடந்த பாசம் c. தாங்கா மாட்டாத துயரம் d. இறந்தபின் கிடைக்கப்போகும் மொய். - அறிவீனம்: மூளை தோளில் முளைத்து, பூமி நோக்கி தொங்கி, ஐந்து விரல்களும் ஒரு முஷ்டியையும் கொண்டிருக்கும் என்று நினைப்பவர்கள். தேசத்தில் சட்டம் இருக்கிறது. தன்னுடைய முட்டாள்தனமெல்லாம் இறுகிய சாதிய அமைப்புக்குள்தான் செல்லும் என்கிற அறிவெல்லாம் அறவே இருக்காது. ஒரு படித்தவன் முன்னால் அமர்ந்து பேசும் அளவுக்குக்கூட அடிப்படை அறிவு இருக்காது. அடிதடியையும் அராஜகத்தையும் குலப்பெருமையாக கடைப்பிடிப்பார்கள். பிடித்து போலிஸிடமோ கோர்ட்டிடமோ கொடுத்த பிறகு பார்க்க வேண்டுமே! நாயாவது வாலை பின்னங்கால்களுக்கு இடையில்தான் விடும். இவர்கள் வாலை ஆசனவாய்க்குள்ளேயே திணித்துக் கொள்வார்கள்.
- வெட்டி வீராப்பு: வடிவேலு காமெடி மதுரை, உசிலம்பட்டி பக்கம் கொடி கட்டி பறப்பதற்கு காரணம் இவர்களின் மனோவியலை அவர் தத்ரூபமாகக் காண்பித்ததுதான். ஒரு வெள்ளை அரைக்கைச் சட்டைதான் அடையாளம். தெற்குப் பக்கம் பெரும்பாலானோர் அணிந்திருப்பதைக் காணலாம். இவர்கள் யாரென்று விசாரித்து பாருங்களேன். ஊருக்கு பெரிய மனிதர்கள் என்று சொல்வார்கள். அப்படி என்ன ஊருக்கு செய்து கிழித்துவிட்டார்கள் என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. அடுத்தவன் நிலத்தை ஏமாற்றி பறித்திருப்பார்கள். இல்லையென்றால் கந்து வட்டிக்கு விட்டு பணம் சேர்த்திருப்பார்கள். பணம் இருப்பதால்தான் இந்த வெள்ளைச் சட்டை, பெரிய மனிதர்கள் கோலமெல்லாம். மற்றபடி MBBS படித்து டாக்டராகியெல்லாம் அல்ல. ஆனால் வெத்து வீராப்பு இருக்கிறதே, காலரை தூக்கிவிட்டுக்கொள்வதென்ன, சட்டைக் கையை ஏத்திவிட்டுக்கொள்வதென்ன, வடிவேலுவேதான்!
- மானமின்மை: மானம் என்பது இருக்கும். நியாயம் இருந்து மானம் இருப்பதுதானே அழகு. நியாயமில்லாமல் மானவுணர்ச்சி மட்டும் இருந்தால் எப்படியிருக்கும்? ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு தப்பு செய்துவிடுவார்கள். ஊரே ஒன்று சேர்ந்து அதை தப்பு என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்பு கேட்க மாட்டார்கள். அப்படியே ‘சூனா பானா’ லெவலில் மெயிண்டய்ன் செய்வார்கள். அதற்கு பின் அந்த எதிரியிடம் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தால் அப்படியே சரண்டர் ஆவார்கள். காரியம் முடிந்த பின் திரும்ப ‘சூனா பானா’வாக ஆவார்கள். இவர்களின் காரியத்துக்காக யார் வாழ்க்கை அழிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். மகளின் சம்பாத்தியத்துக்கு ஆசைப்பட்டு மகள் வாழ்க்கையை அழிக்கும் கும்பலையெல்லாம் பார்த்திருக்கிறேன்.
- காட்டுமிராண்டித்தனம்: இதுதான் மிகவும் கொடியது. இந்தக் காட்டுமிராண்டித்தனம் இவர்களின் மண்டைக்குள் ஊறியது. மிக நுணுக்கமாக துரோகங்களை, கொலைகளை, வாழ்க்கை அழித்தல்களை நிகழ்த்துவார்கள். பெண் குழந்தையைக் கொல்ல கள்ளிப்பாலிலிருந்து நெல்மணி வரை பல டெக்னிக்குகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். தலித்துகள்மீது காட்டும் வன்மம் கொடிதிலும் கொடிது.
இவர்களிடம் பச்சையான சுயநலத்தைக் காணலாம். தன் மகன், மகள்கிட்டேயே உண்மை பேச மறுப்பார்கள். தேவைப்பட்டால் அவர்கள் வாழ்க்கையையும் தன் சுயநலத்துக்காக, வீம்புக்காக அழிக்க அஞ்ச மாட்டார்கள். பழியுணர்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். போலவே பணத்துக்காக தாயைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள்.
முக்கியமாக இவர்கள் போற்றி வளர்க்கும் சாதிப்பற்று, பெண்ணடிமைத்தனம், குடும்ப அயோக்கியத்தனம், பணத்தாசை ஆகியவைதான் என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைக்கின்றன. என்ன எழவு செய்தாலும் சாதிப்பெருமையை பேசுவார்கள். அவர்கள் செய்தது தப்பு என்று சொன்னாலும் அருவருப்பாக பல்லைக் காட்டிச் சிரித்து “இதெல்லாம் சகஜம் தம்பி” என்பார்கள். போலவே, இவர்கள் பாதுகாக்கிற ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும். நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லையென்றாலும் மகனாக பிறந்துவிட்டால் அவன்தான் பிரதானம். அவனுக்குத்தான் முன்னுரிமை, சொத்துரிமை எல்லாம். இதைப் பெண்களான அவன் தாயும், தங்கைகளுமே, எவ்வளவு படித்திருந்தாலும், வழிமொழிவார்கள். அவன் மற்ற பெண்களை (தாய் உட்பட) என்ன வேண்டுமானாலும் பேசலாம். இவர்கள் குடும்பத்தின் பெண்களே, “அவன் ஆம்பள. அவனுக்குத்தான் எல்லாம். அவன் என்ன வேணும்னாலும் பேசலாம்” என சுயமரியாதை கொஞ்சமுமின்றி பேசுவார்கள்.
‘விருமாண்டி’யில் ஒரு டயலாக் வரும். “இங்க பிரச்சின வர்றது மூணு விஷயத்துக்குத்தான். பொன்னு, பொண்ணு, மண்ணு” என்று. அது உண்மைதான். தன் தங்கைகளின் சொத்துப் பங்கையும் அழுது கெஞ்சி ஏய்த்து வாங்கிவிட்டு, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை வரும்போது பேரம் பேசுவார்கள். தேவைப்பட்டால் வசதியாக சண்டைப் போட்டுவிடுவார்கள். செய்யத் தேவையில்லையே.
இவர்களின் குடும்பங்களில் இந்த மாதிரி மனநிலைகள்தான் அதிகம் உலா வருமென்பதால், பிரச்சினைகளுக்கு பஞ்சம் இருக்காது. இவர்களுக்குள்ளாகவே பொறணி பேசுதலும், ஒருவரையொருவர் காலைவாரிவிடுதலும் நடக்கும். அதில் உச்சபட்ச நகைச்சுவை என்னவென்றால், இவர்களின் குடும்பங்களில் ஏன் நிம்மதி இருப்பதில்லை என்பது இவர்களுக்கு புரியவே புரியாது. அதற்கும் இவர்கள்தான் காரணம் என உணருமளவுக்கு தலையில் அறிவு இருக்காது.
சாதிகளே ஈனம்தான். எல்லா சாதிகளும் அசிங்கம்தான். ஆனால் இந்தளவுக்கு அருவருப்பாக எந்த சாதியும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன சண்டைகள் இருந்தாலும் சாதியென்றால் இவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அவ்வகை ஒற்றுமை, குறைந்தது அடிப்படை அளவிலாவது, சாதி மறுப்பு பேசும் நம்மிடையே இருந்திருந்தால் இவர்களையெல்லாம் என்றோ ஒடுக்கியிருக்கலாம். தலித்துகளை தாழ்த்துவதற்கான வருணாசிரமத்தை வகுத்தது வேண்டுமென்றால் பிராமணனாக இருக்கலாம், ஆனால் அவர்களை இன்றளவும் ஒடுக்குவது யார்? அவர்களின் குடிசைகளைக் கொளுத்துவது யார்? இந்த இடைநிலை ஆதிக்க சாதிகள்தானே? பிராமண எதிர்ப்பில் இருக்கும் வீரியத்தை ஏன் இந்த இடைநிலை ஆதிக்க சாதிகளிடம் காட்ட மறுக்கிறோம்?
Disclaimer:
கள்ளர் சாதியில் புனிதர்கள் பலர் இருக்கலாம். அடியேன் கண்ணில் பட்டதெல்லாம் இந்த சனியர்கள்தான். அப்படிப்பட்ட புனிதர்கள் யாரேனும் இதைப் படிக்க நேர்ந்தால், தன் சாதியையும் தன் மதத்தையும் எதிர்ப்பதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என நினைக்கும் ஒரு முட்டாளின் எழுத்து இது என மன்னித்து, ஓரிரண்டு கெட்ட வார்த்தைகளில் மானசீகமாக திட்டிவிட்டு, வேறு பதிவை காணச் சென்றுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.