கிரிக்கெட்: “இந்திய இந்துத்துவத்தின் அவல ஓலம் – அர்னாப் கோஸ்வாமி!”

“இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் இந்தியர்கள் உட்பட. இல்லையென்றால் இவர்கள் அனைவரும் தங்கள் பைகளை கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லலாம்…”
இப்படித்தான் ஆரம்பிக்கிறது அர்னாப் கோஸ்வாமியின் அந்த செய்தி நிகழ்ச்சி. பங்கேற்ற விருந்தினர்கள் பாகிஸ்தான் குறித்து பேசினாலேகூட ‘You can go to pakistan’ என்றுதான் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார் அர்னாப். ஃபைனல் போட்டியில் பாகிஸ்தானை ஆதரிப்பவர்களை ஜெயிலில் போவேண்டும் என்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது தீவிரவாதத்தை ஆதரிப்பதுபோல என்கிறார். பாகிஸ்தான் அணிக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்கிறார் இன்னொருவர். பாகிஸ்தானில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை என்கிறார் இன்னொருவர்.
பாகிஸ்தானை ஆதரித்து பேசிய ஒருவர் ‘பி.ஜே.பி கும்பல்தான் காந்தியை கொன்றது’ என்றவுடன் அர்னாப் ‘Rohit sharma was the man of the match today’ என்று பேச்சை கேவலமாக திசைதிருப்பி கத்தி கத்தி அந்த டாபிக்கை மூடிவிட்டார். இந்தியாவா, பாகிஸ்தானா என்று இப்போதே முடிவெடுக்க வேண்டும், நீங்கள் உங்கள் மதத்தை வைத்து முடிவெடுக்கிறீர்கள், பாகிஸ்தானை ஆதரித்தால் Fraud, தேசத்துரோகி, JNU வெறுப்பு என தொடர்ந்த விவாதம் கடைசியில் காஷ்மிர் இந்துக்கள் vs முஸ்லிம்கள் என்று வந்து நின்றது. முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிராக இருப்பதாகவும், இந்துக்கள் இந்தியாவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் போன்ற கருத்துக்கள் பலமாய் சொல்லப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமும் அதுதான் என்று பலமாக நம்புகிறேன்.
முதலில் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்ல அர்னாப் யார்? பின்னால் யார் இருக்கும் தைரியத்தில் இந்த வார்த்தைகள் வருகின்றன? முடிவை எழுதிவைத்துக் கொண்டு அதற்கேற்ப விவாதத்தை நடத்தி ஊடக அறத்தை நோக்கி காரித்துப்புகிறார் அர்னாப். கிரிக்கெட்டை வைத்து தேசப்பற்றை நிர்ணயிக்கும் சிறுபிள்ளைத்தனமான தலைப்பை எடுத்துக்கொண்டு முழுக்க முழுக்க பிரிவினைவாத கருத்துக்களை பரப்பும் இந்த நிகழ்ச்சியை முதலில் தடை செய்யவேண்டும். தொடர்ச்சியாக இஸ்லாமிய விரோத, பிரிவினைவாத கருத்துக்களை பரப்புவதற்காக அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவேண்டும்.
நிறைய நண்பர்கள் அர்னாப் கோஸ்வாமியை media whore, Press prostitute என்று கெட்ட கேவலமாக எழுதும்போது, கோபத்தில் அவசரப்பட்டு எழுதுகிறார்களோ என்று தோன்றும். ஆனால் அந்த வார்த்தைகள் அத்தனைக்கும் நியாயம் கற்பிக்கும் இந்திய இந்துத்துவத்தின் அவல ஓலம் அர்னாப் கோஸ்வாமி. அவரும் இந்த கேவலமான பிரிவினைவாதிகளும் வயிறு எரிந்து செத்து சுண்ணாம்பாகிய காரணத்திற்காகவே ரசிக்கலாம்- இந்தியாவை நேற்று வீழ்த்திய பாகிஸ்தானின் வெற்றியை!!
பி.கு : அர்னாப்பை அவர் இவர் என்று விழித்திருப்பது அவர் மீதுகொண்ட மரியாதையால் அல்ல. பொதுத்தளத்தில் எழுதுகிறோம் என்கிற சுயகட்டுப்பாட்டால். அது பிடிக்காதவர்கள் அத்தனை இடங்களிலும் ’ர்’ க்கு பதில் ‘ன்’ போட்டுக்கொள்ளலாம். அதுவே அர்னாப் தகுதிக்கு சாலச்சிறந்தது.
JEYACHANDRA HASHMI