“வெந்து சாவுங்கடா! வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் – ரஜினி!!”
கடைசியாக ஆதிக்க வர்க்கங்களுக்கு செருப்படி தரும் பாடல் வரிகள் / திரைக்கதைகள் இந்த வீரியத்தில், அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ‘தசாவதாரம்’ படத்தில் பூவராகன் கதாபாத்திரம் அதை நன்றாக தொடும். அதற்குப் பின் முன் எதுவும் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை!
‘மெட்ராஸ்’ படத்தில் subtleஆக சொல்லியிருந்த ரஞ்சித், ‘கபாலி’யில் இறங்கி அடித்திருக்கிறார் போலும்…
கபாலி title letters முதல் குறீயீடு, பின்பு கதைக்களம் பற்றி பணியாற்றிவர்கள் சொன்னது, இப்பொழுது பாடல் வரிகள்…!
புறம் தள்ளப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையை பெரிதாக தொட்ட பெரிய நடிகர்கள் படங்கள் மிக குறைவு. ‘கபாலி’ படத்தில் அது பளிச்சிடும் என்று நம்புகிறேன் – ரஞ்சித் திரைக்கதைக்கு முக்கியத்துவம் தருபவர் என்று அறிந்ததால்!
இங்கு சிலர், வரிகள் பார்த்து கோபப்படுவதிலேயே, பொருமுவதிலேயே வெற்றி பாதி கண்டுவிட்டார் ரஞ்சித். பாராட்டுகள். ஒத்துக்கொண்ட ரஜினிக்கும் நன்றி!
மண் பேசும் படங்கள், மண்ணின் மனிதர்கள், அடித்தட்டு மக்கள் கதைகள், வலிகள் இவற்றை பேசும் படங்கள் அதிகம் வேண்டும். அது சென்றடைய பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டும்!
இது புதியதொரு தொடக்கமாக இருக்கட்டும்!
கவிஞர் கபிலன் கலக்கியிருக்கிறார்…
அந்த நச் வரிகள் இதோ….
கடைசி இரண்டு வரி அபாரம்!!
//
உலகம் ஒருவனுக்கா ? உழைப்பவனுக்கா?
விடைதருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்!
பூவின் நிழலாய், புல்லாங்குழலாய்
உனை வெளியிடு, துளிர்விடு, பலியாடாய் எண்ணாதே….
விதையாக வாழும் நமக்கு, கதைகள் இருக்கு… நாளை நமக்கே விடியும்
விழித்து போராடு… வானம் உனதே…
பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே!
It Aint About The Size Of The Dog In The Fight, But
The Spirit Of The Fight In The Dog, That’s Right!!!
வேரும் பூவும் வேறில்லை..
கருமேகம் போல நீரில்லை…
அலைகடல் அடங்குமோ அதிகார குரலுக்கு எப்போதும் !?!
மேட்டுக்குடியின் கூப்பாடு… இனி நாட்டுக்குள்ள கேக்காது!
இன முகவரி, அது இனி விழி திறந்திடுமே!
– ரா.ராஜகோபாலன்
# # #
பார்ப்பன கலாச்சாரத்தைப் புகுத்திய பார்ப்பனன் பாலச்சந்தரை ஏற்றுக்கொண்டான்; தேவர் கலாச்சாரத்தைப் புகுத்திய பெரிய மாயத்தேவனை (பாரதிராஜாவை) ஏற்றுக்கொண்டான்; ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று பா.ரஞ்சித் சொல்லும்போது மட்டும் ஏன்டா ஏற்றுக்கொள்ள மறுக்கிறீங்க?!
வெந்து சாவுங்கடா!
வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் – ரஜினி!
– அன்பு ஏகலைவன்