அதுதான் ஒரு நல்லரசுக்கு தேவையான பிம்பம்!
மழை வெள்ளம் என்றதும் சென்னைவாசிகளால் மறக்கவே முடியாத ஆண்டு 2015. மக்களை எல்லாம் கடும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு முதல்வர் மொத்தமாக காணாமல் போனார். சென்னை மேயர் சைதை துரைசாமியோ மைக்குகளை தள்ளி விட்டு நிருபர்களிடம் இருந்து தப்பி ஓடி ஒளிந்தார்.
ஆனால் இன்றைய அரசு நேரடியாக களத்தில் இறங்கி நிற்கிறது. மேயர் நேரடியாக ஊடகங்களை எதிர்கொண்டு பணிகள் பற்றிய அப்டேட் கொடுக்கிறார். முதல்வர் சாலைகளில் உலா வந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். துணை முதல்வர் கண்ட்ரோல் ரூம், கால் சென்டர், ரிப்பன் மாளிகை என்று அலைகிறார். அமைச்சர்கள் தெருக்களில் ரோந்து போகிறார்கள். பெங்களூருவில் இருந்து வேலை நிமித்தம் வந்திருந்த என் நண்பர் நேற்று வெளியே போயிருந்த போது கொட்டும் மழையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளை சுத்தம் செய்வதிலும் அடைத்து கொண்ட வடிகால்களை சரி செய்வதிலும் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்.
இந்த முறையும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. நீர் தேங்கி நிற்பது முதல் நிவாரணப்பணிகள் தாமதமாவது வரை புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முந்தைய அரசு போல ஓடி ஒளியாமல் இந்த அரசும் மாநகராட்சியும் அவற்றை எதிர்கொண்டு சரி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதுதான் ஒரு நல்லரசுக்குத் தேவையான பிம்பம். வாழ்த்துகளும் நன்றிகளும்.
– ஸ்ரீதர் சுப்ரமணியம்